சனிக்கிழமை, ஜனவரி 23, 2021
If you're not happy with the results, please do another search.
Home Search

Chennaiyin FC - search results

If you're not happy with the results, please do another search

ஐஎஸ்எல் 2020-21: சென்னை அணி வெற்றி; அனிருத் தாபா சாதனை படைத்தார்

அனிருத் தாபா இந்த சீசனில் கோல் அடித்த முதல் இந்தியர்
கோவாவில் நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது சென்னையின் எப் சி அணி. ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. தமிழக வீரர் எட்வின் அணியில் இல்லாத சோகம் ரசிகர்களின் வெகு விரைவில் மறந்தது. காரணம், ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அற்புதமான கோல் அடித்து அசத்தினார் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான அனிருத் தாபா. இதன் மூலம் இந்த சீசனில் கோல் அடித்த முதல் இந்தியர்...

ஐஎஸ்எல் 2020-21: தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எப் சி அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியிருந்தாலும் தமிழகக் கால்பந்து ரசிகர்களைகப் பொறுத்தவரை இன்று தான் முதல் ஆட்டம். காரணம், சென்னையின் எப் சி அணி தனது முதல் ஆட்டத்தை இன்று தான் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான முதல் ஆட்டம் என்பதையும் தாண்டி ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான இந்த ஆட்டத்தின் மேல் வேறு சில எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஏனென்றால் கடந்த சீசனில் சென்னை அணியின் அபார ஆட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இரண்டு முக்கிய தூண்களாக இருந்த...

ஐஎஸ்எல்: நடுவர்களின் முடிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் சென்னையின் எப்சி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் கோவாவில் நடந்து வருகிறது. இரண்டு முறை பட்டம் வென்ற அணியும் கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியுமான சென்னையின் எப் சி அணி இந்த முறை தங்களது பயணத்தை ஜாம்ஷெட்பூர் அணிக்கெதிராக வெற்றியுடன் தொடங்கினர். கேரளா பிலாஸ்டர்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறா விட்டாலும் சிறப்பாகவே விளையாடினர். இதனால் சென்னையின் எப் சி அணி தங்களது மூன்றாவது ஆட்டத்தில் அவர்களின் முக்கிய எதிரணியான பெங்களூரு...

ஐஎஸ்எல்: தவறுகளை சரி செய்து மும்பைக்கு எதிராக வெற்றி பெறுமா சென்னையின் எப்சி?

கோவாவில் நடந்து வரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசனில் சென்னையின் எப் சி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் மூன்று விதமான முடிவுகள் வந்துள்ளது. அனைத்து போட்டிகளிலும் ஒரே வீரர்கள் கொண்ட முதல் அணியினையே மேனேஜர் லாஸ்லோ ஆடவைத்தார். முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய வீரர்கள் அடுத்த ஆட்டங்களில் சிறிது சொதப்பினார்கள்‌. குறிப்பாக அணியின் கேப்டன் ரஃபேல் கிரிவெல்லாரோவின் ஆட்டம் அத்துனை சிறப்பானதாக இல்லை. மேலும் பெங்களூரு எப் சி அணிக்கெதிரான போட்டியில் துவக்கத்திலேயே நட்சத்திர வீரர் அனிருத் தாபா காயமடைந்ததும் அணிக்கு பெரும்...

ஐஎஸ்எல்: சென்னையின் எப்சியின் முதல் மூன்று ஆட்டங்களின் அலசல்

ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசனில் சென்னையின் எப் சி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் மூன்று விதமான முடிவுகள் வந்துள்ளது. முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கினாலும் அடுத்த ஆட்டங்களில் சமன் மற்றும் தோல்வியே வந்துள்ளது. இந்த மூன்று ஆட்டங்களிலும் அணியின் மேனேஜர் ஷாபா லாஸ்லோ ஒரே அணியினையே ஆடவைத்தார். முதல் ஆட்டத்தில் அதிரடியாக தொடங்கி கோல்கள் அடித்து அசத்தினாலும் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இரண்டாவது ஆட்டத்தில் கேரளா பிலாஸ்டர்ஸ் அணிக்கெதிராக கோல் அடிக்காவிட்டாலும் சென்னை அணி நிறைய...

ஐஎஸ்எல்: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை-பெங்களூரு போட்டியில் வெல்லப் போவது யார்?

கோவாவில் நவம்பர் 20 தொடங்கி நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனில் ஆட்டங்கள் மெல்ல மெல்லச் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் பலம்வாய்ந்த சென்னையின் எப் சி மற்றும் பெங்களூரு எப் சி அணிகள் மோதுகின்றனர். பெங்களூரு அணி 2017 ஆண்டு ஐஎஸ்எல் தொடரில் இணைந்தது முதலே இவ்விரு அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரண்டு அணிகளும் மோதிய அனைத்து போட்டிகளிலும் களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனல் பறந்தது. இதில் முத்தாய்ப்பாக பெங்களூரு அணிக்கெதிரான 2017...

ஆஸ்கார் விருதுக்கு ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் பரிந்துரை!

உலக திரைப்பட விருதுகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒன்று ஆஸ்கார். இந்த விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021ஆம் ஆண்டிற்கான விருதுகள் அடுத்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான பரிந்துரை பட்டியல்கள் தற்போது தயாராகி வருகின்றன. அந்தவகையில் சிறந்த வெளிநாட்டு மொழி படம் என்ற பிரிவிற்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் லிஜோ ஜோஷ் இயக்கத்தில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. இந்தத் திரைப்படத்தில் ஜல்லிக்காட்டு மாடு வளர்ப்பு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. Watched and really...

ஐஎஸ்எல்: நேற்றைய போட்டியில் கோவா அணியில் கலக்கிய திண்டுக்கல் வீரர் ரோமெரியோ!

தமிழக வீரர் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ்
இந்தியா கால்பந்து உலகில் மிகப்பெரிய அங்கமான இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து போட்டிகளும் இங்கு நடைபெற இருக்கும் நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த எப் சி கோவா மற்றும் பெங்களூரு எப் சி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி இரண்டு கோல்களை அடித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது. அப்போது கோவா அணியின் பயிற்சியாளர் ஒரு வீரரை களமிறக்கினார்....

2020-21 சீசனில் விளையாடவுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டது சென்னையின் எப் சி

சமீபகாலமாக சிறிது சோகத்தில் இருந்தனர் சென்னையின் எப் சி அணியின் ரசிகர்கள். காரணம்? கடந்த சீசனின் மேனேஜர் ஓவன் காயல் மற்றும் கடந்த சீசனின் கோல்டன் பூட் வெற்றியாளர் நேர்கா வால்ஸ்கிஸ் ஆகியோர் ஜாம்ஷெட்பூர் அணியில் இணைந்தது தான். அதோடு மட்டுமல்லாமல் சென்னையின் எப் சி அணியும் எந்த புதிய வீரரை பற்றி அறிவிக்காததும் தான். ஆனால் தற்போது சென்னையின் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். முதலில் அணியின் மூத்த டிஃபென்டர் எலி சபியா அடுத்த சீசனில் விளையாடுவது உறுதி...