அண்மை செய்திகள்
பிங்க் பந்து போட்டிக்கு தயாராகும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி|அட்டவணை
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் பிங்க் பந்து போட்டியில் விளையாடவுள்ளது.
பல போட்டிகள் இந்த வருடம் கொரோனாவினால் தடைப்பட்டு போனது ரசிகர்களின் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் பிசிசிஐ வியாழன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனில் பெண்கள் கிரிக்கெட் அணி இந்த வருடம் பிங்க் பந்து விளையாட்டை ஆஸ்திரேலியாவில் விளையாடுவதாக தெரிவித்திருந்தது.
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை, ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்தில் நடைப்பெறவுள்ளது. இந்திய பெண் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை.
பிங்க் பந்து போட்டி என்றால் என்ன?
பிங்க் பந்து போட்டி 2000-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், முதல் வகுப்பு போட்டிகளும், டெஸ்ட் போட்டிகளும் இரவில் நடக்கலாம். ஆனால், வெளிச்சமின்மையால் இது அதிகமாக பின்பற்றப்படுவதில்லை.
கடைசியாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே, பிங்க் பந்து போட்டி நடந்தது. இது டிராவில் முடிந்தது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இதுவே முதல் முறை.
முக்கியமாக இந்த பந்தும் வித்தியாசமானது. ஆக, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் பயிற்சிகள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
பிங்க் பந்து போட்டியின் அட்டவணை
Sep 19: First ODI, North Sydney Oval (D/N)
Sep 22: Second ODI, Junction Oval
Sep 24: Third ODI, Junction Oval
Sep 30 Oct 3: Day/Night Test match, WACA Ground (D/N)
Oct 7: First T20, North Sydney Oval
Oct 9: Second T20, North Sydney Oval
Oct 11: Third T20, North Sydney Oval.
(நன்றி – பிசினஸ் ஸ்டாண்டர்ட்)