TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

கிரிக்கெட்

ஐ.பி.எல் 2021-ல் விளையாடும் 5 முக்கியமான தமிழ்நாடு வீரர்கள்

ஐ.பி.எல் வந்தாச்சு! எத்தனை தமிழ்நாடு வீரர்கள் விளையாடுகிறார்கள்?

shahrukh khan
X

ஷாருக்கான் (நன்றி - இந்தியா டுடே)

By

Sowmya Sankaran

Published: 9 April 2021 7:17 AM GMT

ஐ.பி.எல் 2021 தொடங்கவுள்ள நிலையில், கிட்டத்தட்ட 53 கிரிக்கெட் வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்வில் பங்கெடுத்துள்ளார்கள். அதில், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்? வாங்க பார்க்கலாம்.

ஹரி நிஷாந்த்

இடது கை ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த், ஏலத்தில் தேர்ச்சிப்பெற்று இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடப்போகிறார். சையத் முஷ்தாக் அலி கோப்பையில் பிரபலமானார். இதுவரை, ஒரே முதல் தர விளையாட்டை விளையாடியுள்ளார். 2019-ஆம் ஆண்டு, மத்யப்பிரதேஷுக்கு எதிராக விளையாடி 45 ரன்களில் 23 புள்ளிகள் எடுத்தார்.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு 20 லட்சம் அடிப்படை விலையில் விளையாடுகிறார்.

ஹரி நிஷாந்த்

ஷாருக்கான்

வலதுக்கை ஆட்டக்காரரான ஷாருக்கான், 2013-14 ஆம் ஆண்டு அண்ணா ஹஜாரே கோப்பையில் விளையாடினார். தொடர்ந்து ரஞ்சி கோப்பையிலும் 2018-19 ஆம் ஆண்டுகளில் விளையாடினார். சையது முஷ்தக் அலி கோப்பையில், 19 பந்துகளில் 40 புள்ளிகள் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பஞ்சாப் கிங்க்ஸ் அணி இவரை விலை கொடுத்து வாங்கியுள்ளது.

5.25 கோடி ரூபாய்க்கு இவர் வாங்கப்பட்டுள்ளது பிரமிக்கவைக்கும் விஷயம்!

சித்தார்த்

வலதுக்கை ஆட்டக்காரரும் மற்றும் இடதுக்கை சுழற்பந்து வீச்சாளருமான சித்தார்த், போன முறை கொல்கத்தா அணியில் விளையாடினார். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில், 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த முறை இவரது சிறப்பான விளையாட்டு திறன் டெல்லி அணியினரை வியக்கவைத்தது.

ஆகவே, டெல்லி கேப்பிடல் அணியின் சார்பாக இம்முறை 20 லட்சம் அடிப்படை விலையில் விளையாடுகிறார்.

தினேஷ் கார்த்திக்

திருச்செந்தூரை சேர்ந்த தினேஷ், விக்கெட் கீப்பரும், வலதுக்கை ஆட்டக்காரரும் ஆவார். 2007-ல், இங்கிலாந்துக்கு எதிரேயான இந்தியாவின் வெற்றியில் இவர் முக்கிய பங்கு அளித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் தினேஷ், இம்முறை கொல்கத்தா நைட் ரைடர் அணியில் தொடர்கிறார்.

தினேஷ் கார்த்திக்

நடராஜன்

பந்து வீச்சாளரான நடராஜன், அண்மையில் தொடர்ந்து செய்திகளில் வருகிறார். சேலத்திலிருந்து வரும் இந்த வீரர், 2015-ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் விளையாடினார். இதனையடுத்து பஞ்சாப் அணி 2017-ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் 3 கோடி ரூபாய்க்கு வாங்கியது. 2018-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார்.


Next Story
Share it