அண்மை செய்திகள்
செல்ஸியை ஐரோப்பாவின் உச்சத்திற்கு எடுத்துசென்ற அந்த இந்தியர் யார்?
செல்ஸி அணியின் வெற்றிக்கு பின்னால், வினய் மேனன் என்ற இந்தியர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.
மேன்சஸ்டர்-செல்ஸி அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் போட்டி நேற்று இரவு நடைப்பெற்றதில், செல்ஸியின் வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த வெற்றிக்கு பின்னால் வீரர்களின் மனதிடம் காரணமா அல்லது தாமஸின் சிறப்பான ஆட்டம் காரணமா என்று கேட்டால், கொச்சியை சேர்ந்த வினய் மேனனுக்கே அனைத்து புகழும் சேரும்.
யார் இந்த வினய் மேனன்?
ஐரோப்பாவின் கால்பந்து அணியுடன் சேர்ந்து பயணிக்கும் சில ஆசியர்களில், வினயும் ஒருவர். முதலில், அனைவரும் வித்தியாசமாக பார்த்திருப்பார்.
விளையாட்டு உளவியலில் பட்டத்தைப் பெற்ற மேனன், முதலில் ரஷ்ஷிய குடும்பத்தினருக்கு மூச்சுப்பயிற்சி கொடுக்க தொடங்கினார். இந்த ரஷ்ஷிய நாட்டவர் தான் செல்ஸி அணியின் உரிமையாளர், ரோமன் அப்ரமோவிச். கிட்டத்தட்ட 12-13 வருடங்களாக பல விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வருவதாக மேனன், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
முக்கியமாக இந்த பயிற்சியாளரின் அத்யாத்மா வித்யா என்னும் பயிற்சி போட்டியாளர்களின் அன்றாட பயிற்சிகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது. கவலைகளையும், எதிற்மறை எண்ணங்களையும் கட்டுப்படுத்த தனி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
இந்த முறை செல்ஸியின் வெற்றிக்கு பின்னால், பல வாதங்கள் இருந்தாலும், மேனனின் மன அமைதி தரும் பயிற்சிகள் பெரிதாக உதவியுள்ளது. பல வருடங்களாக ஐரோப்பாவின் உச்சியில் தொடர்ந்து செல்ஸி பயணிக்கும் ஒரு முக்கிய காரணமும், மேனனின் மன வலிமை பயிற்சிகள் தான்.