அண்மை செய்திகள்
ஒளிந்துக்கொண்டிருக்கும் பிரபல ஒலிம்பிக் வீரர், நடந்தது என்ன?
சுஷில் குமாருக்கும் சாகருக்கும் இடையே நடந்தது என்ன?
இரண்டு முறை ஒலிம்பிக்கில் விளையாடிய பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார், அண்மையில் தொடர்ந்து செய்திகளில் வருகிறார். ஜூனியர் மல்யுத்த வீரரான சாகர் ரானாவை இவர் கொலை செய்த வழக்கில், போலிசார் தேடி வருகின்றனர்.
ஹரிதுவாரிலுள்ள யோக குரு ஆசிரமத்தில் ஒளிந்துக்கொண்டிருப்பதாக டெல்லி போலிசாருக்கு தகவல்கள் வெளியாகியுள்ளது. சுஷிலின் நெருங்கியவரான புரா, சில வருடங்களுக்கும் முன் சுஷிலை விட்டு விலகியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். சுஷில் தொழிலை அஜய் மற்றும் புபேந்திரா கவனித்துகொள்கின்றனர்.
சுஷிலும் அவருடன் இருந்த மல்யுத்த வீரர்களும், சாகரை மே 4 அன்று சத்ராசல் மைதானத்தில் அடித்து துன்புறுத்தியதற்கு பின்பு தப்பித்துள்ளனர். தொடர்ந்து டெல்லி போலிசார் தேடி வருகின்றனர்.
மேலும், சாகருடன் 4 மல்யுத்த வீரர்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் கூறியதாவது, சாகர் தவறாக பேசியதற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை அழைத்து சென்றதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த சம்பவம், சுஷிலின் வாழ்க்கையை பெரிதாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்க சாவடிகளில் ஏற்கனவே பணம் சம்பாதிப்பதால் பணத்தேவைகளில் எந்த பாதிப்புமில்லை.