Begin typing your search above and press return to search.
அண்மை செய்திகள்
சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னையை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் யார்?
அண்மையில் எடுத்த பேட்டியில், சச்சின் தனக்கு சென்னையை சேர்ந்த ஹோட்டல் ஊழியர் ஆலோசனை கூறியதைப்பற்றி விவரித்தார்.
2001-ஆம் ஆண்டு சச்சின் தாஜ் விடுதியில் தங்கியிருந்த போது, ஒரு தோசையை வாங்கினார். இவருக்கு தோசையைக் கொடுத்த பாதுகாப்பு பணியாளர் எஸ்.குருபிரசாத் சச்சினின் விளையாட்டையும், பேட்டிங் விதத்தையும் வேறொரு கோணத்தில் அலசினார்.
ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கைக்கு சச்சின் கூறிய சம்பவம் இதோ.
லிஃப்டில் சச்சின் ஏறிய போது, அவருடைய கையொப்பத்தை குருபிரசாத் கேட்டார். அந்த நேரத்தில் கிரிக்கெட்டைப்பற்றி விமர்சிக்கலாமா என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு சச்சின் ஒப்புதல் அளித்தார்.
குருபிரசாத் கூறிய முக்கியமான விவரம் –
"உங்களது கைமுட்டியில் உள்ள பாதுகாப்பு கருவி, உங்களுடைய மணிக்கட்டு அசைவுகளையும், பேட்டிங் வேகத்தையும் குறைக்கிறது."
தன் வீட்டருகில் குருபிரசாத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து குருபிரசாத் சச்சினுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
என்ன தான் கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டாலும், பிறர் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மிக முக்கியம். இதில் உண்மையிலேயே சச்சின் சிறந்த தலைவராகவும் விலங்குகிறார்.
Next Story