Begin typing your search above and press return to search.
அண்மை செய்திகள்
என்னுடைய பலத்தை வைரலாக்க கொலை செய்தேன் - வழக்கில் திடீர் திருப்பம்
மற்றொரு மல்யுத்த வீரரை கொலை செய்த சம்பவத்தில், சுஷில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்த வீரரான சுஷில் குமார், சில நாட்களுக்கு முன் மற்றொரு வீரர், சாகர் ரானாவை தன் பலத்தைக் காட்டும் விதமாக சத்ரசல் மைதானத்தில் கொலை செய்துள்ளார்.
பல நாட்களாக இவரை போலிசார் தேடிக்கொண்டிருந்த நிலையில், டெல்லி போலீசார் முந்தைய தினம் இவரை கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், டெல்லி போலீசார் சுஷில் குமாரை கண்டுபிடுத்து தருவோருக்கு பல சன்மானங்களை அறிவித்திருந்தனர்.
சாகரின் தந்தை தன் தரப்பு வாதத்தையும் முன்வைத்தார்.
சுஷில் மற்றும் தனது உதவியாளரும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தில், தனிப்படை போலீசார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர். இதில்,
"என் நண்பர் பிரின்ஸிடம் வீடியோ எடுக்க சொன்னேன். காரணம், என்னுடைய பலத்தைக் காட்டுவதற்கும், என்னை எதிர்த்து யாரும் நிற்கக்கூடாது என்ற எச்சரிக்கைக்காகவும் செய்தேன்"
என்று கூறினார்.
இதில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக நேற்று போலீசாரின் காவலில் 6 நாட்கள் இருக்க ரிமாண்ட் அறிவிக்கப்பட்டது.
Next Story