காக்கியில் கால்பந்து விளையாடும் தமிழ்நாட்டின் பிரபலம் யார் தெரியுமா?

15 மணி நேரம் மக்களைக் காப்பாத்துவதற்கும் தயங்கியதில்லை, தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமையை சேர்க்க தவறியதுமில்லை.

Update: 2021-04-02 12:00 GMT

இந்துமதி கதிரேசன் (நன்றி - Shethepeople)

ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு சீருடை உண்டு. ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்த இந்த பிரபலத்திற்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது.

அந்த காக்கி கால்பந்து வீரர் யார்?

கடலூரின் சொத்தாகக் கருதப்படும் இந்துமதி கதிரேசன், இந்திய பெண்கள் கால்பந்து போட்டியில் மிட்ஃபீல்டராக தேசிய அளவில் விளையாடியது நம்மில் பலருக்கு தெரியும்.

ஆனால், கொரோனா வைரஸ் தொடங்கிய பின், இவர் தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் ஒரு சிறப்பான காவலராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடம் எந்த ஒரு போட்டியும் நடக்காததால், மக்களைப் பாதுகாக்கும் சிறந்த பணியை நேர்த்தியாக செய்தார். சென்னை அண்ணாநகர் பகுதியில், தன் பணியை செய்வதைக் காணலாம். ஒரு நாளுக்கு சுமார் 13 மணி நேரம் உழைக்கிறார்.

அண்மையில் அனைத்து இந்திய கால்பந்து ஃபெடரேஷன் நடத்திய கலந்துரையாடலில், இந்துமதிக்கு ஒரு முக்கிய பொருப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸை எதிர்த்து நடைப்பெறும் போட்டியில், இந்திய பெண்கள் கால்பந்து அணியின் தலைவியாக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே 2014-ல் 6 கோல்கள் அடித்து எஸ்.ஏ.எஃப்.எஃப் பெண்கள் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பயணத்தைத் தொடர்ந்த இந்துமதி, 2016 மற்றும் 2019-ல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்தார். இப்படிப்பட்டவரை ஏ.ஐ.எஃப்.எஃப் முன்னிலைப்படுத்துவதைப் பெருமையாக நினைக்கிறது.

அவருடைய காணொளியைக் காணலாம். 


2022-ல் நடைப்பெறும் ஏ.எஃப்.சி. பெண்கள் ஆசியக்கோப்பை கால்பந்து விளையாட்டில் விளையாடுவதற்கு, இப்பொழுதே பயிற்சிகளைத் தொடங்குகிறார் நம் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.

Tags:    

Similar News