10 கால்பந்து வீரர்களை ஒரே ஆட்ட்த்தில் இறக்கி இந்தியா புதிய சாதனை

10 புது வீரர்களை ஒரே கால்பந்து ஆட்டத்தில் இறக்கி 1-1 என்ற கோல் கணக்கில் முடிந்த ஆட்டம்

Update: 2021-03-27 05:52 GMT
இந்திய கால்பந்து அணி (நன்றி - டிவிட்டர்)

ஒரு பக்கம் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய கால்பந்து அணியினர் புது முயற்சியில் இறங்கி சாதனைப் படைதுள்ளார். 

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் பங்குப்பெற்ற வீரர்களை, ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்கியது இந்தியா. பத்து புது முகங்களை அறிமுகப்படுத்திய சாதனை ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் வீரர்களின் சராசரி வயது நம்மை பிரமிக்க வைக்கிறது. 

UEFA லீக் போட்டியில் பங்கேற்ற வீரர்களின் சராசரி வயது 26-30. 


கால்பந்து வீரர்களின் சராசரி வயது

நன்றி - https://doi.org/10.3389/fpsyg.2019.00076

இந்த வயது சரியானதா? சரியாக விளையாட முடியுமா? இது போன்ற குழப்பங்கள் இருக்கிறது. 

Professional Footballers' Association படி இருபத்தி ஒரு வயதில், ஒரு கால்பந்து வீரர் களத்தில் விளையாட தேர்ச்சி பெறுகிறார். ஆனால், பிரீமியர் லீக் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு சராசரியாக 25 வயதில் தான் கிடைக்கிறது.  

ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் சராசரியாக 24 வயது. 2018-ல் ஏற்கனவே இந்திய அணி விளையாடிய போது, அவர்களின் சராசரி வயது 25 ஆக இருந்தது. இந்த முறை இவர்கள் முதலில் சற்று தடுமாறினாலும், இரண்டாவது பாதியில் 55-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து டிராவில் முடிந்தது. 

இவர்களின் பயிற்சியாளர் ஐகோர் டிவிட்டர் பக்கத்தில் பேசியதாவது - 



அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினாலும், சிங்கலசானா கிலியரும், கோல் கீப்பர் அம்ரிந்தர் சிங்கும் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையம் ஈர்த்தார்.  

 இவர்களின் ஆட்டம், மற்ற அணிகள் மத்தியில் வயது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.  


Tags:    

Similar News