தமிழ்நாட்டில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் அமைச்சரான கதை
தமிழ்நாட்டின் அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவில், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் சுகாதாரத்துறை அமைச்சரானார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில், திமுக வெற்றிப்பெற்றுள்ளது. இன்று நடைப்பெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மக்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது மா.சுப்பிரமணியனின் தேர்வு.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவதற்கேற்ப நோயற்ற வாழ்வுக்கு தேவையான இயற்கையையும், பயிற்சியையும் பெரிதும் விரும்புபவர் இவர். 2006-11 ஆம் ஆண்டில் சென்னையின் மேயராக பதவியேற்த இவர், ஆட்சிக்கு பின்னர் மக்களிடையே உடற்பயிற்சிகளைப் பற்றிய பரப்புரையில் ஈடுபட்டுவந்தார்.
60 வயதில் மாரத்தான்
100 மாரத்தான் போட்டிகளுக்கு மேல் பங்குப்பெற்ற சுப்பிரமணியன், 60 வயதிலும் கட்டுக்கோப்பான உடல்நிலையையும், மன திடத்தையும் பெற்றுள்ளார். 2012-ஆம் ஆண்டு தொடங்கிய இவரது உடற்பயிற்சி மீதுள்ள ஆர்வம், இன்று வரையிலும் நீடிக்கிறது.
எத்தனை வேலைகள் இருந்தாலும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கடமையிலிருந்து சற்றும் தவராதவர் இவர்.
2004-ஆம் ஆண்டு நடந்த விபத்தில், இவருடைய மூட்டு எலும்பு 7 துண்டுகளாக உடைந்தது. மேலும், இவருடைய மண்டை ஓட்டில் வெடிப்பு ஏற்பட்டு இருந்தது.
இயல்பு நிலைக்கு மாறுவது கடினம் என பல மருத்துவர்கள் கூறியும், உடற்பயிற்சியின் மீதும், விளையாட்டின் மீதும் தொடர்ந்து ஆர்வம் செலுத்திவந்தார். தன்னம்பிக்கையின் சிகரம் என்று பலராலும் பார்க்கபடுபவர் தான் இவர்!
சுகாதாரமா விளையாட்டா?
சுகாதாரமா விளையாட்டா என்று கேட்டால் இரண்டுமே என்று கூறும் அளவிற்கு மா.சுப்பிரமணியன் தன் திறன்களை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் இவருடைய பங்கு பெரிதாகயிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, இவருடைய காலத்தில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம், இயற்கை உணவு மற்றும் சமச்சீர் வாழ்க்கை பற்றியெல்லாம் பேச வாய்ப்புகள் அதிகம்.
இவருடைய பங்கு விளையாட்டுத்துறையிலும் இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கலாம்.