ஒலிம்பிக்ஸ் நடக்குமா நடக்காதா? ஜப்பானியர்கள் ஏற்படுத்திய புது குழப்பம்
அண்மையில் நடந்த வாக்கெடுப்பில், 60 சதவீதத்திற்கு மேற்பட்ட ஜப்பான் மக்கள் ஒலிம்பிக்கிற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.
தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பல விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டு நடக்கவேண்டிய ஒலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக இந்த வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டு, தேர்வு போட்டிகள் எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் ஜப்பானில் டோக்யோ ஒலிம்பிக் நடக்ககூடாது என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
ஜப்பான் பிரதமரின் செவிக்கு சென்ற இந்த செய்தியின் எதிரொலியாக, அவர் கூறியது –
அகில உலக ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக்கின் தலையெழுத்தை முடுவெடுக்கட்டும்.
எக்காரணத்தைக்கொண்டும் ஒலிம்பிக் தடை செய்யப்படாது என்று இதுவரை கூறியிருந்தவர், இப்போது கை மீறி போகும் நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
கோவிட்-19
கொரோனா தொற்று காட்டுத்தீ போன்று பரவி வரும் நிலையில், மக்கள் பிற நாடுகளிலிருந்து வீரர்கள் வந்தால் மேலும் தொற்று அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். வாக்கெடுப்பு நடத்தியதில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் டோக்யோவில் தற்காலிகமாக ஒலிம்பிக் நடக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி நிலை
ஏப்ரல் 20ஆம் தேதி கிடைத்த கணக்கின் படி, 1 சதவீத ஜப்பானிய மக்களே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒலிம்பிக் போட்டி நடந்தால், டோக்யோவில் போதுமான மருத்துவர்கள் இப்போதைக்கு இல்லை.
ஃபுகுஷிமா அணு கதிர்வீச்சு
கொரோனா பரவலுக்கு முன்னரே, ஃபுகுஷிமாவின் கதிர்வீச்சு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணம், கதிர்வீச்சின் தாக்குதலும் வேகமும் அதிகம். இதற்கிடையே போட்டி நடத்துவது அனைவரையும் பாதிக்கக்கூடும்.
இத்தனை காரணங்கள் இருந்தாலும் ரசிகர்கள் ஆகிய நமக்கு ஒரு எதிர்பாராத செய்தி!