ஐ.பி.எல் 2022-ஆம் ஆண்டுக்கான அறிவிப்பை வெளியிட்டதால் ஏற்பட்ட சர்ச்சை

பிசிசிஐ குழுமம் ஐபிஎல் 2022-ஆம் ஆண்டுக்கான தொடரைப்பற்றி அறிவித்த நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-05-19 05:22 GMT

ஐபிஎல் 2022 பற்றி பிசிசிஐ எடுத்த முடிவு (நன்றி - டிஎன்ஏ இந்தியா)

கொரோனாவால் ஐ.பி.எல் போட்டி, இந்த வருடம் திடீரென் தள்ளிவைக்கப்பட்டது. அயல்நாட்டு வீரர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு செல்வதற்கான எந்த வசதியையும் பிசிசிஐ செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.

மே 4 ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்ட இப்போட்டியானது, மீண்டும் தொடங்க வாய்ப்புகள் இருக்கின்றதா என்று யாருக்கும் தெரியவில்லை. பல பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், பிசிசிஐ குழுமம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2022

பிசிசிஐ குழுமம் அடுத்த சீசனுக்கு இப்போதே தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

8 அணிகளாக இதுவரை வீரர்கள் விளையாடிய நிலையில், 2022-ஆம் ஆண்டு முதல் 10 அணிகள் போட்டி போடும் என்று கூறியுள்ளனர்.
மேலும், ஏலம் மிகவும் பிரம்மாண்டமான விதத்தில் நடக்கும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த முடிவுக்கு பின்னர், பிசிசிஐ தன் அறிவிப்புகளை பின்வாங்கியுள்ளது.

பல்வேறு தரப்பின ர் அழுத்தம் கொடுத்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்துவதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News