தாயாகவும், வீராங்கணையாகவும் - 3 இந்திய சூப்பர் அம்மாக்கள்

பல பிரபல இந்திய வீராங்கணைகள், ஒரு பக்கம் குடும்பத்தையும், மற்றொரு பக்கம் விளையாட்டையும் சிறப்பாகக் கையாண்டு வருகின்றனர்.

Update: 2021-05-09 13:13 GMT

இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் திருமணத்திற்கு பிறகு குடும்ப மேம்பாட்டில் கவனிப்பது மிக அவசியம். காலங்கள் மாற, பெண்கள் வேலையையும், குடும்பத்தையும் சம அளவில் கவனித்து வருகின்றனர். விளையாட்டுத்துறையைப் பொறுத்த வரை, பெண்கள் புதிய வாய்ப்புகளைப்பெற்று வளர்ச்சியடைந்து வருகின்றனர். இதில் முக்கிய பொறுப்பிலிருக்கும் வீராங்கணைகள் எப்படி தாய்மையையும், விளையாட்டையும் கவனிக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க.

அனிதா பால்துரை


நன்றி - விகடன்


 


முன்னாள் கூடைப்பந்து வீராங்கணையான அனிதா, தேசிய அளவில் 30 கோப்பையையும் பெற்று இந்தியாவின் பெண் கூடைப்பந்து அணியின் முகமாக இருந்தார். வாய்ப்புகளும் பொறுப்புகளும் ஒரு பக்கம் அதிகரிக்க, இவரது மகப்பேறு காலத்தில் மிகவும் கடினப்பட்டார். குடும்பத்தின் ஒத்துழைப்புடன் குழந்தையை வளர்க்க தொடங்கி, தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யவும் தொடங்கினார். இன்று மீண்டும் போட்டியில் பங்கெடுக்கிறார்.

சானியா மிர்சா

பிரபல டென்னிஸ் வீரரான சானியா, மகப்பேறு காலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். 6 கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளும் பெற்ற சானியா, 2007-ஆம் ஆண்டிலேயே 1 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். சற்றும் சலைக்காமல், முனைப்புடன் உழைக்கும் இந்த சூப்பர் அம்மா இளம் பெண்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மாரி கோம்

நன்றி - ஔட்லுக்


இந்திய பெண் வீராங்கணைகளின் முன்மாதிரியாக திகழும் மணிப்பூரின் மேரி கோம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 6 முறை வெற்றிப்பெற்றிருக்கிறார். இரண்டு முறை குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வெடுத்தாலும் சற்றும் கவனத்தை திசை திருப்பாத மேரிக்கு, 2007 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகளும், 2013 ஆம் ஆண்டு மூன்றாவதாக மகனும் பிறந்தார்.

இவரை போன்று பல வீராங்கணைகள் இருந்தாலும், இவர்கள் அனைவரும் எடுத்துக்காட்டுவது ஒரே செய்தி –

முனைப்புடன் வாழந்தால் வெற்றி வெகு தூரம் இல்லை. ஆனால், எந்த நேரமும் குடும்பத்தை விட்டுவிடக்கூடாது.

Tags:    

Similar News