பிஎஸ்பிபி பள்ளியின் சர்ச்சையில் குரல் கொடுத்த முக்கிய கிரிக்கெட் வீரர்

சென்னையிலுள்ள பிரபல பள்ளியான பிஎஸ்பிபி மாணவிகளை ஆண் ஆசிரியர் துன்புறுத்தியதாக குற்றம் எழுந்துள்ளது.

Update: 2021-05-26 12:24 GMT

பிஎஸ்பிபி பள்ளி கடந்த இரண்டு நாட்களாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக, இந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பல வருடங்களாக செய்த துன்புறுத்தலின் பேரில் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருகின்றது. ஒரு பக்கம் ராஜகோபாலனை போலீசார் விசாரணை செய்துக்கொண்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் தங்களது அனுபவங்களையும் கூறிவருகின்றனர்.

இந்நிகழ்வில் உலகளவில் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் கிரிக்கெட் வீரர், ரவிச்சந்திரன் அஷ்வின் குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் பதிவிட்ட டிவிட்டர் பதிவின் படி, இவர் இந்த பள்ளியின் முன்னாள் மாணவராக மட்டுமல்லாமல், தன் மனைவியை அறிந்துகொண்ட ஒரு இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நேர்ந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

தன் பதிவிற்கு மேலும் மெழுகூட்டும் விதமாக, மகள்களைப் பெற்ற தந்தையாக இந்த சம்பவம் அதிச்சியளிக்கிறது என்றார்.

Tags:    

Similar News