சென்னையின் தடகள பயிற்சியாளர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது

இளம் பயிற்சியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் சென்னையை சேர்ந்த தடகள பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-29 12:50 GMT
தொடரும் பாலியல் வழக்குகள் (நன்றி - ப்ளேஓ)

சென்னையை சேர்ந்த பூ கடை அனைத்து மகளிர் காவல் நிலையம், 59 வயதான தடகள பயிற்சியாளரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. பல்வேறு இளம் பயிற்சியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.

நாகராஜன் என்ற தடகள பயிற்சியாளர் சரக்கு மற்றும் சேவை வரி துறையில் வேலை பார்த்து வருகிறார். 2013 முதல் 2020 வரை இவரிடம் பயிற்சி பெற்று வந்த 19 வயது பெண், புகாரில் இவர் உடற்பயிற்சி சிகிச்சை வகுப்புகள் என்ற பெயரில் பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கை மேலும் விசாரித்த போது, இவர் ஏற்கெனவே இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டு வந்தார் எனவும், விசாரணை நடந்ததாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால், நாகராஜன் அனைத்து புகார்களையும் மறுத்து விட்டார்.

Tags:    

Similar News