பிப்ரவரி 8ஆம் தேதி முதல் தொடங்கும் மகளிர் கால்பந்து திருவிழா!

Update: 2021-02-06 12:03 GMT

கர்நாடக மாநிலத்தில் மகளிர் கால்பந்து போட்டிகளுக்கு அம்மாநில கால்பந்து சங்கம் அதிகம் ஆதரவு அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு மகளிர் கால்பந்து லீக் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இன்டிமெஸ்ஸி கால்பந்து லீக் தொடர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘நாயுடு ஹால்’ நிறுவனம் ஸ்பான்சராக உள்ளது.

இந்தத் தொடரில் 10 அணிகள் களமிறங்க உள்ளன. இந்தத் தொடருக்கான பத்திரிகை பார்ட்னராக ‘த பிரிட்ஜ்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் நாயுடு ஹால் துணைத் தலைவர் மணிகண்டன், ‘த பிரிட்ஜ்’ தளத்தின் உரிமையாளர் அர்ஷி யாஷின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் போட்டிகளின் போது பயன்படுத்தப்படும் கால்பந்துகள் வழங்கப்பட்டது.

இத்தொடரின் அனைத்து போட்டிகள் தொடர்பான அப்டேட்ஸ் ‘த பிரிட்ஜ்’ தளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் நேயர்கள் தெரிந்து கொள்ளலாம். இத்தொடர் வரும் 8ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பின் மகளிர் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் கர்நாடகாவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்தத் தொடர் குறித்த விவரங்களை பெற www.ksfa.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சென்னையின் எஃப்சி வீரர்கள்!