தோனிக்கு ஐ.பி.எல்-லில் விளையாட தடை விதிக்கப்படுமா?

பஞ்சாப் அணியுடன் விளையாடியதற்கு பின்பு, தோனிக்கு ஐ.பி.எல் குழுமம் சார்பில் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது. காரணம்?

Update: 2021-04-16 12:04 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் தோனி (நன்றி - இந்தியாடைம்ஸ்)

இன்று நடக்கவிருக்கும் சென்னை மற்றும் பஞ்சாபிற்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில், சென்னை அணி தனது இரண்டாவது லீக் விளையாட்டை விளையாடுகிறது. முதலில், டெல்லி அணிக்கு எதிராக விளையாடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால், இவருக்கு எதற்கு அபராதம் என்று கேட்டால் பந்து வீச்சாளர்களின் வேகமே காரணம் என்று கூறலாம்.

சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் காலதாமதமாக வீசியதற்கு, 12 லட்சம் ரூபாய் அபராதம் தோனிக்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருக்கும் போட்டியில் இந்த பிரச்சனைத் தொடர்ந்தால், இவருக்கு தடை விதிக்க வாய்ப்புகள் இருக்கிறது. 13-ஆவது ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியினர் மாபெறும் தோல்வியை சந்தித்தனர். இதனையடுத்து, 14ஆவது போட்டியிலும் தோனி பெரிதாக ஈடுபாடு காட்டாதது அனைவரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியது.

பந்து வீச்சின் விதிவிலக்குகள் என்னென்ன?

ஐ.பி.எல் விளையாட்டு விதிமுறைகளின்படி, ஒவ்வொறு ஓவருக்கு பின்னும் பந்து வீச்சின் வேகத்தை கணக்கெடுப்பது வழக்கம். விதி 12.7.3-ன் படி, பல விதிவிலக்குகள் உண்டு.

  • காயத்தின் காரணமாக மருத்துவர் தாமதமாக சிகிச்சை கொடுத்தால், அந்த நேரம் கருதப்படாது.
  • அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டு வீரர் வெளியே செல்ல நேரம் செலவாவது எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
  • நடுவர் தீர்ப்பு பெற நேரம் சேர்க்கப்படாது.

இது போன்ற விதிவிலக்குகள் எல்லாம் கணக்கில் கொண்டு, பி.சி.சி.ஐ குழுமம் இன்று நடக்கவிருக்கும் போட்டியில் தீவிரமாக கண்காணிக்கும்.

தோனி போட்டியை தன் வசப்படுத்துவாரா?
Tags:    

Similar News