இந்தியாவின் மற்றுமொரு படகோட்டி விஷ்ணு சரவணன் ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி

சென்னை இராணுவ வளாகத்தில் பணியாற்றும் படகோட்டி விஷ்ணு சரவணன் டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி

Update: 2021-04-08 11:25 GMT

விஷ்ணு சரவணன் (நன்றி - ஃபேஸ்புக்) 

2021-ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள டோக்யோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியா ஒன்றுக்கும் மேற்பட்ட படகோட்டும் நிகழ்ச்சிகளில் பங்குபெறும். லேசர் எஸ்.டி.டீ பிரிவில், இன்று ஆசியாவின் இரண்டாவது படகோட்டியாக ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி பெறுகிறார்.

மூன்றாவதாக புதன் வரை இருந்த விஷ்ணு சரவணன், இன்று இரண்டாம் நிலைக்கு தேர்ச்சிப்பெற்று ஒலிம்பிக் ஒதுக்கீடு பெற்றுள்ளார். நேற்று நேத்ரா முதலாவதாக தேர்ச்சிப்பெற்ற நிலையில், விஷ்ணு அடுத்ததாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார்.

யார் இந்த விஷ்ணு?

இந்திய இராணுவத்தில் நயிப் சுபேதாராக பணி புரிபவர் விஷ்ணு. இவர் படகோட்டும் குடும்பத்திலிருந்து வருகிறார். இவருடைய தந்தை தான் இவருக்கு ஆசான். விஷ்ணுவின் தங்தையும் இராணுவத்தில் சுபேதாராக பணியாற்றினார். 2014-ஆம் ஆண்டு, ஆண்கள் விளையாட்டு நிறுவனம் மற்றும் எம்.ஈ.ஜி-யில் பயின்றார்.

22 வயதே ஆகும் விஷ்ணு, 2017-ஆம் ஆண்டு ஜுனியர் கமிஷண்டு அதிகாரியாக செயல்பட்டார். இவருடைய தகுதிக்கேற்ப, ஒலிம்பிக்கிற்கு 11-ஆவது இந்திய படகோட்டியாக தேர்ச்சி பெறுகிறார்.

ஒரு பக்கம் தங்தையின் ஊக்கம் கிடைக்க, இவருடைய சகோதரி ரம்யா சரவணனும் உலகளவில் பிரபலமான படகோட்டி. முசன்னாவில் ஓபன் படகோட்டும் சாம்பியன்ஷிப்பில், ஆறாவதாக தேர்ச்சிப்பெற்றார்.

Tags:    

Similar News