விராத் கோலியை பணக்காரராக்கிய அவரது 5 நிறுவனங்கள் என்ன தெரியுமா?

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராத் கோலி, ஐந்து நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

Update: 2021-04-25 09:32 GMT

இந்தியன் சூப்பர் லீக் எஃப்.சி. கோவா (நன்றி - டிவிட்டர்)

சில வாரங்களுக்கு முன் நடைப்பெற்ற பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்றாம் இடத்தை பிடித்தார். ஒரு பக்கம் பல விளம்பரங்களில் நடித்து வரும் இவர், மற்றொரு பக்கம் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

1. ராக்ன்

விராத் கோலி வித்திட்ட ஃபேஷன் நிறுவனம் இது. இளைஞர்களைக் குறிக்கோளாகக் கொண்டு நடத்தி வரும் இந்த நிறுவனம், பிரபலங்களுக்கும் துணிகளை வழங்கி வருகிறது.


2. ந்யூவா

பிரபல கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் கபில் தேவ் ஏற்கனவே உணவகம் நடத்தி வரும் நிலையில், கோலிக்கு பெரிதாக வருமானம் ஈட்டும் நிறுவனம் இந்த தென் அமெரிக்க உணவுகளைத் தயாரிக்கும் டெல்லியில் உள்ள ந்யூவா.

3. ஒன்8

விளையாட்டுத்துறையில் உடைகளைத் தயாரித்துவரும் நிறுவனமான பூமா-வுடன் இணைந்து, கோலி ஒன்8 என்னும் விளையாட்டு உடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோலியை முன்னிறுத்தி பல்வேறு விளையாட்டு சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம்.

4. சிசல் இந்தியா

பெங்களூருவில், கோலி சிசல் இந்தியா என்னும் பெயரில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வருகிறார். உடற்பயிற்சி மட்டுமல்லாமல், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சேவைகளையும் அளித்து வருகிறார்.

5. இந்தியன் சூப்பர் லீக், எஃப்.சி கோவா

இந்தியன் சூப்பர் லீக் எஃப் சி கோவாவின் இணை உரிமையாளராக, கோலி பல கோடிகளை ஈட்டி வருகிறார்.

கிரிக்கெட்டில் ஓய்வெடுக்கும் செய்தியை திடீரென்று கோலி அறிவித்தாலும், இந்நிறுவனங்கள் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News