ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கத்தை வென்ற வினேஷ் ஃபோகத்! யார் இவர்?

இந்தியாவிற்கு தங்கத்தை வென்று தந்தார் உலகத்தின் முதல் மல்யுத்த வீரரான வினேஷ் ஃபோகத்.

Update: 2021-04-17 07:15 GMT

மல்யுத்த வீராங்கனை வினேஷ் ஃபோகத் (நன்றி - ஔட்லுக்)

கடந்த மாதம், உலகத்தின் மல்யுத்த வீரர்களின் தரவரிசைப்பட்டியலில் வினேஷ் ஃபோகத் முதலிடம் பிடித்துள்ளார். 2014 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற காம்மன்வெல்த் போட்டிகளில், அடுத்தடுத்து தங்கங்களைக் குவித்தார் வினேஷ். 2019-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை மல்யுத்த போட்டியில், 53 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

தன்னுடைய சீனா மற்றும் ஜப்பான் எதிரணி வீரர்களை தோற்கடித்து, வினேஷ் 53 கிலோ பிரிவில் தங்கத்தை வென்று சாதனை படைக்கிறார். மேலும், திவ்யா காக்ரான் (72 கிலோ) மற்றும் சாக்ஷி மாலிக் (65 கிலோ) வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

பெண்கள் விளையாட்டில், இந்தியா நான்கு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலக் கோப்பைகளை பெற்றுள்ளனர்.

யார் இந்த வினேஷ்?

இந்திய மல்யுத்த வீரரான வினேஷ், மல்யுத்த வீரர்களின் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய சகோதரிகள், பபிதா குமாரி மற்றும் கீதா ஃபோகத், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்கள். இவருடைய கணவர் இரண்டு முறை தேசிய அளவில் தங்கப்பதக்கங்களை வென்றார். இவருடைய தற்போதைய திறனைப்பார்த்தால், உலகளவில் பிரபலமான பல மல்யுத்த வீரர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்தார்.

டிவிட்டரில் தனது பெருமிதத்தைத் தெரிவிக்கிறார் வினேஷ். 


இந்த முதல் தங்கத்தின் மூலம் ஃபோகத் சகோதரியான வினேஷ் இந்தியாவை பெருமைப்படுத்துகிறார்.

Tags:    

Similar News