இந்தியாவின் கம்பலா போட்டி வீரர் ஸ்ரீனிவாச கௌடா தேசிய போட்டியில் பங்குப்பெறுவாரா?

சில நாட்களுக்கு முன் 125 மீட்டர் களத்தை, தன் எருதுகளுடன் 9.55 நொடிகளில் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

Update: 2021-03-26 14:16 GMT

ஸ்ரீனிவாச கௌடா (நன்றி - டிவிட்டர்)

இந்தியாவின் உசைன் போல்ட் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச கௌடா கடந்த வருடம் புகழின் உச்சத்திற்கு சென்றார். 100 மீட்டரை 9.55 நொடியில் கடந்து, உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்தார்.

ஏற்கெனவே பயிற்சிக்கு உட்படுத்திக் கொள்ளாமல், தன் எருமை மாடுகளின் வேகத்தால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாக கூறினார். இதன் மூலம் கிரண் ரிஜுஜுவின் வாய்ப்பை நழுவ விட்டார். பிரபல தொழிலதிபர் கௌடாவின் வேகத்தைப் பார்த்து, ரிஜுஜுவிடம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் 125 மீட்டர் களத்தை, தன் எருதுகளுடன் 9.55 நொடிகளில் கடந்து சாதனைப் படைத்துவிட்டார்.

இது உலக சாதனையாக கருதப்படுகிறது.

தேசிய பயிற்சியில் ஸ்ரீனிவாச கௌடா பங்கேற்பாரா?

அவருடைய வேகத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, நல்ல முன்னேற்றங்களைக் காணலாம். கம்பலா போட்டியில் அவர் இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமை சேர்த்துக் கொண்டுவருகிறார்.

கௌடாவின் முடிவே இறுதி முடிவானாலும், இந்திய அரசு இது போன்ற வீரர்களை மேம்படுத்த வாய்ப்பு தருவது மிக அவசியம். கிராமத்திலிருந்து வந்த ஸ்ரீனிவாச கௌடா, அடுத்த தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே இருக்கிறது.

எருதுவுடன் தேசிய அளவில் போட்டி போடுவாரா? காத்திருப்போம். 

Tags:    

Similar News