சஞ்சு சாம்சன் செய்தது சரியா தவறா?

நேற்று நடந்த போட்டியில், கடைசி ஓவரில் சிங்கிள் தர மறுத்த சாம்சன் ஆட்டத்தையும் இழந்து அனைவரது அதிருப்தியை பெற்றுள்ளார்.

Update: 2021-04-13 04:33 GMT

சஞ்சு சாம்சன் (நன்றி - ஈ.எஸ்.பி.என்)

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடினார். முதலில் விளையாடிய பஞ்சாப் அணியினர், 221 ரன்களைக் குவித்தனர். ராஜஸ்தான் அணியினர் விளையாடிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. காரணம், சஞ்சு அடுத்தடுத்த விக்கெட்டுகள் இழந்தாலும் தொடர்ந்து 119 ரன்கள் குவித்தார். இப்படி விளையாடினால் நிச்சயமாக ராஜஸ்தான் அணியினர் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணிய போது, சஞ்சு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

சஞ்சு கொடுத்த அதிர்ச்சி

ஐ.பி.எல் தொடங்கியதிலிருந்து நேற்று வரை நடைப்பெற்ற போட்டிகளில், நேற்றைய ஆட்டம் தான் விறுவிறுப்பாக இருந்தது. அதுவும் 19ஆவது ஓவர் வரை வெற்றி பெரும் அணியினரை கணிக்க இயலவில்லை. கடைசி ஓவரில், சஞ்சு 13 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

முதல் இரண்டு பந்துகளிலும் சிங்கிள் அடித்தார். ஓவரின் 5ஆவது பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், திடீரென்று சிங்கிள் எடுக்க மறுத்தார். காரணம், அடுத்த பந்தில் சிக்ஸர் அடிக்கலாம் என்று. மஞ்சு இப்படி செய்தது மோரிஸை அதிர்ச்சியில் தள்ளியது.

கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பார் என்று நம்பியபோது, சஞ்சு சாம்சான் அவுட் ஆகி அணியின் வெற்றி வாய்ப்பையும் நழுவவிட்டார்.

இவர் செய்தது சரியா தவறா என்று யாராலும் கணிக்க இயலவில்லை. இது போன்று நடப்பது விளையாட்டில் இயல்பு தான் என்று பல பார்வையாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

சஞ்சுவின் விளையாட்டு உத்திக்கு பல கிரிக்கெட் வீரர்களும் தங்கள் கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.



இதனிடையே சஞ்சுவின் தனது திருப்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 


Tags:    

Similar News