இந்தியாவில் PUBG மூலமாக பணக்காரர்கள் ஆனவர்களின் பட்டியல்

PUBG விளையாடி பணம் சம்பாதிக்கலாமா? மாற்று யுத்தியை பயன்படுத்தும் PUBG விளையாட்டாளர்கள் பற்றி பார்க்கலாம்!

Update: 2021-05-02 12:46 GMT
பப்ஜி (நன்றி - டி.என்.ஏ இந்தியா)

PUBG என்பது ஒரு விளையாட்டு. அதையும் தாண்டி பலர், அதில் வாழ்க்கையை அமைத்து வருகின்றனர். இந்த விளையாட்டு விளையாடுவதை அடுத்து, உத்திகளை சொல்லிக்கொடுத்தும் சம்பாதிக்கின்றனர்.

நமன் மதுர் - மார்டல்

டீம் சோல் என்னும் நிறுவனத்தை நடத்தி வரும் நமன் மதுர், 5 மில்லியன் பின்தொடர்புகளையும், 580 மில்லியன் மொத்த காணொலி பார்வைகளையும் பெற்றுள்ளார்.

யாஷ் சோனி – வைப்பர்

வைப்பர் என்கிற யாஷ் சோனி, டீம் சோல் நிறுவனத்திற்காக PUBG விளையாடி வருகிறார். தனக்கென 881,000 பின்தொடர்புகளும், 87 மில்லியன் பார்வைகளையும் பெற்றார்.

தன்மய் சிங் – ஸ்கௌட்

ஆரஞ்ச் ராக்கை சேர்ந்த தன்மய் சிங், தனக்கென இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் பின்தொடர்புகளும், யூடியூப்பில் 2 மில்லியன் பின்தொடர்புகளும், காணொலிகளுக்கு மொத்தமாக 224 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளார்.


ஓவைஸ்

எஃப்னாட்டிக் மொபைல் என்னும் நிறுவனத்திற்கு, முகம்மது ஓவைஸ் லகானி விளையாடி வருகிறார். இதன் மூலம், 527,000 பின் தொடர்புகளும், 65 மில்லியன் காணொலி பார்வைகளையும் யூடியூப்பில் பெற்றுள்ளார்.

ஹர்பிரீத் – ரோனாக்

ஹர்பிரீத் சிங் ஜஞ்ஜுஹா எஃப்னாட்டிக் மொபைல் என்னும் நிறுவனத்திற்கு விளையாடி வருகிறார். யூடியூப்பில், 648,000 பின்தொடர்புகளும், 29 மில்லியன் மொத்த பார்வைகளையும் பெற்றுள்ளார்.

என்ன தான் விளையாட்டு விளையாடினால் பணம் நேரடியாக வரவில்லையென்றாலும், இவர்கள் அனைவரும் யூடியூப் போன்ற தளங்களின் மூலம் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினர்.
Tags:    

Similar News