தமிழ்நாட்டின் 14-வயது செஸ் வீரர் நிகழ்த்திய சாதனை

பொம்மைகளை வைத்து செஸ் விளையாடத்தொடங்கிய 14 வயதான பிரணவ், இப்போது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவருகிறார்.

Update: 2021-04-04 13:25 GMT

பிரணவ் (நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா) 

அண்மையில் நடைப்பெற்ற 68-ஆவது தமிழ்நாடு ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், தனிழ்நாடை சேர்ந்த வீ.பிரணவ் 9 சுற்றுகளிலும் வெற்றிப்பெற்று கோப்பையை வென்றுள்ளார். இதனையடுத்து, இவருடைய வெற்றிகளைப்பார்த்து உலக அளவு மாஸ்டர்ஸாகக் கருதப்படும் ரவிசேகர், முருகன் மற்றும் மானுவே ஆரோன் அவர்களுடன் இணைகிறார். 2019-ஆம் ஆண்டில் இவர் 8 சுற்றுகளில் வெற்றிப்பெற்றார்.

யார் இந்த பிரணவ்?

வேலம்மாள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பிரணவ், தன் செஸ் பயணத்தை ஐந்து வயதில் தொடங்கினார். விலங்கு பொம்மைகளைவைத்து விளையாட தொடங்கிய பிரணவ், விளையாட்டின் நுணுக்கங்களை அவராகவே கற்றுக்கொண்டார்.



நன்றி - Chessbase

 2012-13 ஆம் ஆண்டில், வார இறுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொண்டு முதல் கோப்பையை வென்றார்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

இந்த குறளுக்கேற்ப, தன் மகனின் வெற்றிக்கு தொடர்ந்து ஊக்கத்தைக் கொடுத்துவந்தார். பிரணவின் தந்தைக் கூறியதாவது - 

Full View

பள்ளிகளுக்கிடையே 2014-ல் நடைப்பெற்ற தேசிய அளவிலான போட்டியில், கோப்பையை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2016-ல் மன்கோலியாவில் நடைப்பெற்ற ஆசிய யூத் சாம்பியன்ஷிப் போட்டியில், தன் நகர்வுகளுக்கு தனி அங்கீகாரம் கிடைத்தது.

அதற்கு பின், பிரணவ் ஒவ்வொரு நாடாக சென்று இந்தியாவின் சார்பில் விளையாடி வருகிறார். வெற்றிகள் பல இருந்தாலும், எந்த ஒரு போட்டிக்கும் பயிற்சி மிகவும் முக்கியம்.

சிலருடைய வெற்றியை நம்மால் முன்னரே அறிந்துக்கொள்ள முடியும். அது போன்று தான் பிரணவும்! தமிழ்நாட்டின் அடுத்த விஸ்வநாதன் ஆனந்தை பிரணவ் மூலமாகக் காணமுடிகிறது.

Tags:    

Similar News