கொரோனா தடுப்புக்கு உதவிக்கரம் நீட்டிவரும் ஐபிஎல் அணிகளும் வீரர்களும்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவின் கொரோனா நிலையை எண்ணி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

Update: 2021-04-30 13:58 GMT

கொரோனா தடுப்பு பணிகள் (நன்றி - தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை, இந்தியாவின் நிலையை உலுக்கி வருகிறது. ஐபிஎல் நடப்பதில் பல இடர்ப்பாடுகள் இருந்தும், போட்டிகள் நடந்து வருகிறது. கை மீறி போகும் நிலையில், ஐபிஎல் அணிகளும் பல விளையாட்டு வீரர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

முதலாவதாக டெல்லி கேப்பிடல் அணி சுமார் 1.5 கோடி ரூபாய் என்.சி.ஆர்-ல் உள்ள அரசு சாரா நிறுவனத்திற்கு அளித்தனர். முக்கியமாக, ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு உதவி அளித்து வருகின்றனர். பிராஜக்ட் பிளாஸ்மா என்னும் முயற்சியை எடுத்தனர்.

கொரோனாவில் இருந்து குணம்பெற்று வந்த சச்சின் டெண்டுல்கர், மிஷன் ஆக்சிஜன் என்னும் சமூக திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். இந்த திட்டத்தில் ஆக்சிஜன் கான்சன்ரேட்டர் அளித்து வருகின்றனர்.

டெல்லி அணிக்கு அடுத்தப்படியாக, ராஜஸ்தான் ராயல் அணி 7.5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தனர். இந்த அணியின் அரசு சாரா நிறுவனமான ராயல் ராஜஸ்தான் ஃபௌன்டேஷன், பிரிட்டிஷ் ஏஷியன் டிரஸ்ட்-உடன் இணைந்து கொரோனா வைரஸ்-இல் தவித்து வரும் நபர்களுக்கு உதவுகின்றனர்.

இவர்களை போல், ஹர்பஜன் சிங் கொரோனா சோதனை ஆய்வகம் தொடங்கியுள்ளார். இதன் மூலம், ஒரு நாளுக்கு 1500 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம். கொல்கத்தா பேசர் மற்றும் ஆஸ்திரேலிய வீரருமான பாட் கும்மின்ஸ், 50,000 டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

ரவீந்த்ர ஜடேஜா, தன் சகோதரியுடன் இணைந்து ராஜ்கோட்டில் உள்ள அடிப்படை வசதியில்லாத மக்களுக்கு மளிகை பொருட்கள் அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News