சென்னையின் நேத்ரா ஒலிம்பிக்கில் தேர்ச்சி பெற்று சரித்திரம் படைக்கிறார்

ஒலிம்பிக்கில் தேர்வு பெற்று இந்தியளவில் சரித்திரம் படைக்கிறார் படகோட்டும் நேத்ரா!

Update: 2021-04-07 15:22 GMT

நேத்ரா குமணன் (நன்றி - Twitter)

டோக்யோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இன்னும் மூன்றே மாதங்கள் இருக்கும் நிலையில், தேர்வு சுற்றுகள் நடைப்பெற்று வருகிறது. 2021-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் படகோட்டப்போட்டியில், 350 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

23 வயதேயான தமிழ்நாட்டின் நேத்ரா குமணன் இந்தியாவின் முதல் பெண்மணியாக ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்படுகிறார். லேசர் ரேடியல் போட்டி முசன்னாவில் நடைப்பெற்றது. இது ஆசியாவின் தேர்வுக்கான ஏற்பாடு. நடைப்பெற்ற 10 போட்டிகளில், நேத்ரா முதலிடத்தில் இருக்கிறார்.

இதற்கு முன் 2008-ஆம் ஆண்டில், நச்சத்தர் சிங்க் இந்தியாவின் சார்பாக இதே போட்டியில் பங்குபெற்றார். 49-எர் பிரிவின் கீழ், 2004-ஆம் ஆண்டு மலவ் ஷ்ரோஃப் மற்றும் சுமீத் பட்டேல் பங்குப்பெற்றார்.

நேத்ராவின் வெற்றி சென்னையின் வெற்றி கூட! முதல் நாளில், 4-ஆம் இடத்தில் நிறைவுப்பெற்றது. அடுத்தடுத்த நாட்களில், முதலும் இரண்டாம் இடமும் பிடித்த நேத்ரா மற்றொரு இந்திய வீரர் ரம்யாவைத் தோற்கடித்தார்.

நேத்ராவின் தேர்ச்சி சரித்திரத்தில் நிச்சயமாக இடம் பிடிக்கிறது! நாளை, ஒரே ஒரு சுற்று போட்டியின் பேரில் விளையாட வேண்டும். ஆனாலும், நேத்ராவின் தேர்ச்சி நிச்சயம்!

இதுவரை கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில், 60-ஆவதாக நுழைகிறார் நேத்ரா.

நேத்ரா-தந்தை உறவு

சென்னையின் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்று வரும் நேத்ரா, கோடை முகாமின் போது எதேச்சையாக இந்த விளையாட்டைப் பயின்றார். மேலும் அவருடைய தம்பி, நவீனையும், இந்த விளையாட்டைக் கற்க வைத்தார். இவருடைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் இவருடைய தந்தை.

விளையாட்டிற்கு தேவையான ஆராய்ச்சியை, நேத்ராவுக்கு தொடர்ந்து அளித்துவந்தார். மேலும், நேத்ராவின் திறனை உலகளவில் வீரர்களுடன் ஒப்பிட்டு மேலும் புது விதங்களைக் கற்றுத்தந்தார். ரியோ 2016 தேர்வில் தோல்வி அடைந்த போது, மீண்டும் இந்த விளையாட்டில் பங்கெடுக்க காரணம் இவருடைய தந்தை.

தேவையான பயிற்சிகள்

அண்ணா சதுக்கத்திலுள்ள தமிழ்நாடு படகோட்டும் குழுமத்தில், குமணன் பயிற்சி பெற்று வந்தார். போர்ட்டில் அதிகப்படியாக பயிற்சிகள் மேற்கொண்டு, அடுத்தடுத்த நிலையில் நேத்ரா தேசியளவில் பயிற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினார்.

உடற்கூறு மற்றும் விளையாட்டின் அறிவுமே இந்த விளையாட்டில் வெற்றி பெற காரணம் என்று எப்போதுமே கூறியுள்ளார்.

இவருடைய விடாமுயற்சி இவரை வெற்றி நடை போட ஏதுவாக அமையட்டும்!

Tags:    

Similar News