MI vs PBKS கவனிக்காத தவறுகளும், சொல்லிக்கொடுத்த பாடமும்!

நடந்து முடிந்த மும்பை vs பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பையின் வீழ்ச்சிக்கு காரணம் யார்? என்ன நடந்தது?

Update: 2021-04-24 09:16 GMT

மும்பை-பஞ்சாப் (நன்றி - தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சற்றும் எதிர்பாராத விதமாக மும்பை அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது. இதில் மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம், மும்பை அணி எடுத்த ரன்கள். 20 ஓவர்களில், 131 ரன்களும், 6 விக்கெட்டுகளையும் இழந்தனர்.

யார் என்ன தவறு செய்தார்கள்? இந்த போட்டி புகட்டிய முக்கிய பாடங்கள் இதோ.

முக்கிய பாடங்கள்

அணியின் வீரர்களை அலசுவது முக்கியம்

ப்ந்துவீச்சில் அசத்தும் கே.எல்.ராகுல் இந்த முறை பஞ்சாப் முறையில் இணைந்துள்ளார். அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்வது அவசியம். அதே போல், பிஷ்னோயின் பந்துவீச்சு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. ஐ.பி.எல்-லின் முதல் சில போட்டிகளில், வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் அனில் கும்ளேவிடம் ஆட்டத்தின் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். இது, மும்பை அணிக்கு தெரியவில்லை.

குவின்டனின் வலுவிழந்த ஆட்டம்

ஐ.பி.எல்-இன் முதல் ஆட்டத்திலிருந்தே குவின்டனின் பங்கு எதிர்பார்த்த அளவிற்கில்லை. ஒரு பக்கம் குவின்டன் விளையாட அணியின் வீக்கத்திற்கு காரணமாக இருந்த நிலையில், மற்றொரு பக்கம் கிரிஸ்ஸின் ஆட்டம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

பாண்டியாவின் தொடர் திணறல்

குவின்டன் ஒரு பக்கம் வெகு சுமாராக விளையாடிய நிலையில், பாண்டியா சகோதரர்கள் பாட்டின்கிலும் சர், பந்துவீச்சிலும் சரி சரியாக விளையாடவில்லை. குறுகிய தூரத்தில் பந்து வீசி ஓவர்களை வீணடித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி வலு பெற்றது.

சரியான முறையில் வீரர்களைக் களமிறக்குவது முக்கியம்

மும்பை அணியினர் ஆட்டத்தை இழக்கும் அறிகுறிகள் இருக்கும் நிலையில், சூர்யகுமார் யாதவ்வை சரியான நேரத்தில் களமிறக்கவில்லை. இஷான் கிஷனை தேவையில்லாத நேரத்தில் இறக்கி, மும்பை அணி 21/1 ரன்கள் பவர் விளையாட்டின் முடிவில் பெற்றது.

விளையாட்டு வீரர்களை சரியாக களமிறக்குவது மிக முக்கியம் என இந்த போட்டி தெரிவிக்கிறது.
Tags:    

Similar News