இந்தியாவின் விளையாட்டுத்துறையின் தலைநகரமாக தமிழ்நாடு மாறுகிறதா?

பல விளையாட்டுகளில் தொடர்ந்து தமிழ்நாட்டின் வீரர்கள் வெற்றிப்பெறுவதற்கான காரணம் அரசின் விளையாட்டு மேம்பாட்டு திட்டமா?

Update: 2021-04-21 07:52 GMT

தமிழ்நாட்டின் கிரிக்கெட் வீரர் (நன்றி - தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

அண்மையில் தொடந்து செய்திகளில் தமிழ்நாட்டின் வீரர்களின் வெற்றிக்கதைகளைப் பார்க்கமுடியும். ஒரு காலத்தில் விளையாட்டு என்றால் வட மாநிலங்கள் தான் அனைவரது நியாபகத்திற்கு வரும். ஆனால், இப்போது நிலை மாறிக்கொண்டு வருகிறது. காரணம்?

அரசின் மேம்பாட்டுத் திட்டங்கள்

அண்மையில் முடிந்த தேர்தலில், பல்வேறு கட்சிகள் தங்களது வாக்குறுதியில் விளையாட்டுத்துறையயும் சேர்த்துள்ளனர். ஆனால், அதில் திருப்தி பெறாத பிரபல ஃபென்சர் பவானி தேவி தனது கண்டனத்தை தெரிவித்து வந்தார். இதனிடையே, தமிழக முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடுத்தடுத்து பல விளையாட்டு அரங்கங்களையும், பயிற்சி கூடத்தையும் திறந்த வைக்கிறார். பிப்ரவரி மாதம் ஹாக்கி மற்றும் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தைத் திறந்து வைத்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வீரர்கள், அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறலாம். மேலும், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும் விளையாட்டு கூடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அண்மையில் பிரபலமான தமிழ்நாட்டின் வீரர்களின் பங்கு என்ன?

கிரிக்கெட்டில் கடந்த மூன்று வருடங்களாக, நடராஜன் செய்திகளில் தொடந்து வருகிறார். இவருடைய திறன் ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திலிருந்து வந்து சாதனை செய்ததற்காக இவரை முன் மாதிரியாக மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். இவரைப் போன்று, ஷாருக்கான், வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் தினேஷ் கார்த்திக்கும் தமிழ்நாட்டை உலக அளவில் பிரபலமாக்கி வருகின்றனர்.


செஸ் விளையாட்டை எடுத்துக்கொண்டால், பிரணவின் சாம்பியன்ஷிப் வெற்றியும், அர்ஜுன் கல்யாணின் க்ராண்ட்மாஸ்டர் பட்டமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


கேரம் போட்டியுல், மரியா இருதயம் போன்ற வீரர்கள் தனக்கென பயிற்சி கூடத்தை உருவாக்கி உலகளவு வீரர்களை உருவாக்கி வருகின்றனர். மேலும், இளவழகி, ஆரோகியராஜ் மற்றும் ரவிவர்மன் ஷர்மிளா தமிழ்நாட்டின் சார்பில் விளையாடி வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உலகக்கோப்பை படகோட்டும் போட்டியில் தமிழ்நாட்டின் வீரர்கள் தேர்ச்சி பெற்று வருவது மேலும் பெருமிதத்தை அளிக்கிறது. நேத்ரா குமணன், கணபதி மற்றும் விஷ்னு சரவணன் சென்னையை உலக அளவில் புகழ்பெற வைத்தனர்.


இத்தனை வீரர்கள் ஒரு பக்கம் சாதனை புரிகிறார்கள்! மற்றொரு பக்கம் அரசு விளையாட்டுத்துறைக்கு மேம்பாட்டு திட்டத்தை அறிவிக்கிறது!
இந்த நிலையில், தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத்துறையின் தலைநகரமாக மாறுமா?

Tags:    

Similar News