ஐ.பி.எல்-லில் திடீர் திருப்பம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று அபாயம்! ஐ.பி.எல்-லில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வான்கடே மைதானத்தில் நடைப்பெறவிருக்கும் ஐ.பி.எல். போட்டி திடீர் திருப்பங்களுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் 5 இந்திய விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மற்றொரு பக்கம், ஐ.பி.எல் நிர்வாகம் மாற்று மைதானங்களை தயார் செய்து வருகிறது. இந்த 14ஆவது சீசன் – சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் இடமாற வாய்ப்புகள் இருக்கிறது.
இன்னும் சில நாட்களே இருக்கும் சூழ்நிலையில், 25-க்கும் மேற்பட்ட ஐ.பி.எல். ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அக்சர் படேலுக்கு இன்று உறுதியான நிலையில், ஏற்கனவே சி.எஸ்.கே வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் பங்கேற்கவில்லை என்று அறிவித்திருக்கிறார்.
கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணாவுக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது.
ஐ.பி.அல் நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், 10 நாட்கள் வரை தனிமையில் இருக்கவேண்டும்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில்,
ஐ.பி.எல் நடக்குமா? எதிர்பார்த்த வீரர்கள் பங்கேற்பார்களா? அறிவிப்புக்கு காத்திருப்போம்.