முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆட்டோ ஓட்டுநர் ஆனப் பின் நடந்த திருப்பம்

முன்னாள் குத்துச்சண்டை வீரர், அபித் கான், ஆட்டோ ஓட்டுநர் ஆனதையடுத்து ஒருவர் அவர் வாழ்வில் குத்துவிளக்கேற்றினார்.

Update: 2021-04-20 13:48 GMT

அபித் கான் (நன்றி - தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

சில நாட்களுக்கு முன், சண்டிகாரின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் அபித் கானின் காணொலி இணையத்தில் வலம் வந்தது. பட்டியாலாவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்-இல் டிப்ளமா பட்டம் பெற்ற இவர், ஒரு தேசிய குத்துச்சண்டை வீரர். 60 வயது கடந்த நிலையில், யூடியூப் காணொலி ஒன்றில் இவரது வாழ்க்கை வரலாறு காண்பிக்கப்பட்டது.

வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்களைப் பெற்ற இவர், பணமின்மையால் சவுதி அரேபியாவில் வாகனம் ஓட்ட தொடங்கினார். 1990-ல் இந்தியா வந்ததற்கு பின், வாகன ஓட்டுநராகவும், சுமையை ஏற்றி வைக்கும் வேலையையும் செய்து வந்தார்.

2004-ல் தனக்கென்று ஒரு ஆட்டோவை வாங்கியதற்கு பின், அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கான் கூறியதாவது -

இத்தனை வருடங்கள் இந்தியாவில் இருந்து ஏழை விளையாட்டு வீரரான எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

கானின் வாழ்வில் வந்த திருப்பம்

கானின் காணொலி பிரபலமான நிலையில், பல்வேறு இடத்திலிருந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. திரோனாசார்யா விருதுப்பெற்ற ஷிவ் சிங்க், அபித் கானுக்காக பல வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தார். குத்துச்சண்டையில் வல்லமைமிக்கவர், அடுத்த தலைமுறைக்கு இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நம்பினார்.

திடீரென்று இவர் வாழ்க்கை மின்னத்தொடங்கியதன் காரணம், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா உதவிக்கரம் நீட்டியுள்ளார். பணமாக எந்த உதவியும் பெற விருப்பமில்லா அபித் கானின் நேர்மையைக்கண்டு வியந்த ஆனந்த், அபித்தின் சொந்த ஊரில் குத்துச்சண்டை பயிற்சி நிறுவனம் தொடங்க முதலீடு செய்வதாகக் கூறியுள்ளார்.


Tags:    

Similar News