கடலூரின் சிங்கம் இப்போ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு ரெடி!

இளவேனில் வரார் ஒதுங்கி நில்லு என்று சொல்லும் அளவிற்கு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார் கடலூரின் சிங்கப்பெண்

Update: 2021-04-05 13:26 GMT
இளவேனில் (நன்றி - டிவிட்டர்) 

தங்கம் ஆகட்டும் வெள்ளி ஆகட்டும், எந்த ஒரு கோப்பையாக இருந்தாலும் தட்டி தூக்கும் வல்லமைப்படைத்தவராக இருக்கிறார் கடலூரின் முத்து, இளவேனில் வாலறிவன். துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவின் முதல் நபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் இளவேனில். 15-நபர் இந்திய துப்பாக்கி சுடும் நிகழ்ச்சியில், இவர் தேர்வாகியிருக்கிறார்.

அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இளவேனிலின் தொடர் திறனைக்கண்டு தேர்வாளர்கள் இவரை தேர்வு செய்திருக்கிறார். தொடர்ந்து ஐந்து போட்டியில், சிறப்பான ஆட்டத்தை விளையாடியவரே அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. அஞ்சும் மௌத்கிலுக்கு சாதகமாக சிங்கி 50 மீட்டர் ரைஃபில் களமிறங்கப்போகிறார்.


10 மீட்டர் ஏர் ரைஃபில் என்று சொல்லப்படும் விளையாட்டில், தேசிய அளவில் இளவேனிலுக்கு அதிகாரிகள் ஊக்கம் அளித்து வந்தார்கள். கடலூரை சேர்ந்த இளவேனில், உலகக்கோப்பை விளையாட்டுக்கு புதிது கிடையாது. 2018-ம் ஆண்டில், 10 மீட்டர் ஏர் ரைஃபில் பெண்கள் விளையாட்டில் இரண்டாம் இடத்தைப்பிடித்தார்.

அதே போன்று, ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக்கோப்பை விளையாட்டில் இளவேனில் கோப்பையை வெற்றி பெறாத நாட்களே கிடையாது.

ஒலிம்பிக் நடக்க இன்னும் மூன்றே மாதங்கள் இருக்கும் நிலையில், தமிழகத்தை உலகளவில் தலை நிமிர்த்த வருகிறார் இளவேனில்!

Tags:    

Similar News