முதலில் வீரர்கள், பின்னர் தான் நான்: நெகிழவைக்கும் தோனியின் செயல்

ஐபிஎல் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தோனி தன் குழு வீரர்களின் மீதுள்ள பற்று அனைவரையும் நெகிழவைக்கிறது.

Update: 2021-05-06 06:12 GMT

தல தல தான்! (நன்றி - டி.என்.ஏ இந்தியா)

தல தல தான் என்று சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் தலைவர் தோனியை பாராட்டுவது வழக்கம். இதற்கேற்ப, அண்மையில் ஐ.பி.எல் போட்டிகள் கொரோனாவின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பல நாடுகள் வீரர்கள் நாட்டுக்குள் வருவதை தடை விதித்துள்ளது. இதனால், சிஎஸ்கே வீரர்கள் பலர் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இணைய வழியில் தன் குழு வீரர்களை சந்தித்த தோனி கூறியதாவது

"என் குழு வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியதற்கு பின்னரே ராஞ்சிக்கு திரும்புவேன்"

என்று கூறியுள்ளார்.

மேலும் அயல்நாட்டு வீரர்கள் வீடு திரும்பியதற்கு பின்னரே, இந்திய வீரர்கள் திரும்புவார்கள் என்று கூறினார். தனி விமானம் ஒன்றை அனுப்பி, பல இந்திய வீரர்களை பெங்களூரு, சென்னை, மும்பை, ராஜ்கோட் போன்ற இடங்களில் தங்களது வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். வியாழனன்று, ராஞ்சிக்கு தோனி செல்லவுள்ளார்.

ஆஸ்திரேலியா வீரர்களுக்கு புது ஏற்பாடு

ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பிரத்யேகமாக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தடை காரணமாக மாலத்தீவில் தங்க முடிவெடுத்துள்ளனர். தன் தந்தையின் பிரிவை, வர்ணனை மூலம் வெளிப்படுத்தினார் டேவிட் வார்னரின் குழந்தை.

மற்ற நாடுகள் செல்வதற்கான ஏற்பாடு

யுனைட்டட் கிங்க்டம் வீரர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். ஒரு சிலர், இன்னும் செல்லவுள்ளனர். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வீரர்கள் தன் நாட்டை சேர்ந்து, தனியார் விடுதியில் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில வீரர்கள் தத்தளித்து இருக்கும் நிலையில், தல தோனி அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார். இப்படியும் ஒரு தலைவரா என்று பலரையும் வியக்க வைத்தார்.

நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க!
Tags:    

Similar News