18 வயதேயான சென்னையின் செஸ் வீரர் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ஆகிறார்

சென்னையின் செஸ் வீரர் அர்ஜூன் கல்யாண் இந்தியாவின் 68ஆவது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்

Update: 2021-04-22 08:07 GMT

அர்ஜுன் கல்யாண் (நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா)

சென்னையை சேர்ந்த 18 வயதான அர்ஜூன் கல்யாண் இந்தியாவின் 68ஆவது கிராண்ட்மாஸ்டராக செவ்வாய் அன்று அறிவிக்கப்பட்டுள்ளார். ட்ராகன் கோசிக்கை எதிர்த்து நடைபெற்ற 5-ஆவது சுற்றில், அர்ஜுன் போட்டியை வென்று, 2500 ஈ.எல்.ஓ புள்ளிகளையும் பெற்றுள்ளார். போன வாரம் தொடங்கிய போட்டிகளில் பட்டத்தை வெல்லும் வரை சென்று, தோற்துவிட்டார்.

செஸ் வீரர்களுக்கு 2500 ஈ.எல்.ஓ புள்ளிகள் மிக முக்கியமான ஒன்று. ஜூன் 2019-ல் இத்தாலியில் விளையாடும் போது, 2500 புள்ளிகளை எட்ட மூன்று புள்ளிகளே மீதம் இருந்தது. ஆனால், அந்த புள்ளிகளைப் பெற பல மாதங்கள் ஆகியது.

கண் சிகிச்சையும், செஸ் விளையாட்டும்

சென்னையின் தியாகராயநகரிலுள்ள டீ.நகர் செஸ் அகாடமியில், அர்ஜுன் செஸ் விளையாட்டின் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். மேலும், பிரபல பயிற்சியாளர்களான ஐ.எம்.சரவணன் மற்றும் உக்ரெயினை சேர்ந்த ஜி.எம்.அலெக்சாண்டர் கோலோஷ்சபொவும் இவருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

போன வருடம் பாட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும் போது, தனது கண் அடிப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் முனைப்புடன் செயல்பட்ட அர்ஜுன், தனது 12-ஆம் வகுப்பு தேர்வுகளை சிறப்பாக முடித்துவிட்டு, சென்னையின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பை தொடங்கினார்.

கொரோனாவினால் எந்த போட்டிகளும் இல்லாத நிலையில், உணவகம் நடத்திவரும் இவரது தந்தை சரவணப்பிரகாஷ் இவருடைய வெற்றிக்காக தொடர்ந்து மெனக்கிடுதலில் ஈடுபட்டார்.

தன்னம்பிக்கையுடன் செர்பியாவில் நடைப்பெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். இதனிடையே, இவரது தாயும் தேசிய அளவில் 200 மீட்டர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News