இந்தியாவின் பெருமை என கருதப்படும் மித்தாலி ராஜின் தாய்மொழி என்ன தெரியுமா?
உலகளவில் புகழ் பெற்ற இந்திய பெண் கிரிக்கெட் வீரர் மித்தாலி ராஜின் தாய்மொழி அவருக்கு தனி அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மித்தாலி ராஜ் ரசிகர்களின் செல்லப்பிள்ளை என்றே கூறலாம். தற்போது பெண்கள் சீனியர் ஒரு நாள் கோப்பையில், இந்திய ரெயில்வே சார்பாக பெங்கால் பெண்கள் அணியினரை எதிர்த்து விளையாடுகிறார்.
அகில அளவிலான பெண் கிரிக்கெட் வீரர்களில், 10,000 ரன்கள் அடித்த இரண்டாவது பெண் இவரே. மேலும், அடுத்த தலைமுறை பெண் வீரர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
தமிழும் மித்தாலியும்
இவருடைய வெற்றிகள் ஒரு பக்கம் இருக்க, இவருக்கு தமிழ்நாடு மக்கள் எப்போதும் ஆதரவாகவே இருந்திருக்கிறார். 2019-ஆம் டிவிட்டரில் நடந்த கருத்து மோதல்களில், இவருடைய தமிழ் மொழிப்பற்றை வெகுவாக வெளிப்படுத்தினார்.
டிவிட்டரில் மித்தாலி கூறியதாவது,
ராஜஸ்தானில் பிறந்த இவர், தமிழ் குடும்பத்தில் வளர்ந்து வந்தார். 10 வயதில் பயிற்சியை தொடங்கிய மித்தாலி, தமிழ் தொலைக்காட்சி பேட்டிகளுக்கு தமிழில் தான் பதிலளிப்பது வழக்கம்.
மேலும், கடந்த 20 வருடங்களில் ODI கிரிக்கெட்டில் விளையாடிய ஒரே பெண் வீரர் இவரே. பிரபல நட்சத்திரங்கள் அஞ்சு ஜெயின், அஞ்சும் சோப்ரா மற்றும் பூர்ணிமா ராவுடனும் விளையாடி இருக்கிறார்.
கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, மித்தாலி தன் சிறப்பான விளையாட்டின் மூலம் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.