டெல்லி அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் தயாரித்த உத்திகள் என்ன?

சென்னை அணியினர் நம்பிக்கையூட்டும் அணிகளில் ஒன்று! பல குழப்பங்களை சந்தித்த நிலையில், தோனி புது யுத்திகளை இறக்குகிறார்.

Update: 2021-04-10 12:04 GMT

குருவை மிஞ்சுவாரா சிஷ்யன்? (நன்றி - ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

ஐ.பி.எல் 2020-க்கு பின், தல எம்.எஸ்.தோனிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. போன முறை ரன்னராக வந்த டெல்லி அணியினருடன் முதல் சுற்றுலேயே சென்னை அணியினர் சந்திக்கின்றனர்.

  • ரிஷப்பை தோனியுடன் ஒப்பிடும் போது, தோனி தலைவராக இருப்பது புதிது அல்ல. ஏற்கனவே சென்னை அணியில் இருந்தவர்கள் இம்முறையும் அதிகபட்சம் தொடர்கிறார்கள். ஆக அனைவரது திறனுக்கேற்ப, தோனி இம்முறை பங்குகளை பிரித்திருக்கிறார்.
  • மேலும் செதேஷ்வர் புஜாரா, இந்தியாவின் முதன்மை டெஸ்ட் ஹீரோ 11 வருடங்களுக்கு பின் தோனியின் தலைமையில் விளையாடுகிறார். இதன் மூலம், ஆட்டக்காரர்களின் பட்டியல் நம்பிக்கையை அளிக்கிறது.
  • வீரர்களை களத்தில் இறக்கும் வரிசைக்கு தோனி இம்முறை அதிக கவனல் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • சுரேஷ் ரைனாவின் சேர்க்கை, சென்னை அணியினரின் பலத்தைக் கூட்டுகிறது. முக்கியமாக, முதன்மை ரன்-கெட்டராக 5368 ரன்கள் குவித்துள்ள ரைனா இருப்பதில், சென்னை அணியினர் பெருமூச்சு விடலாம்.

அதிக பயிற்சிகள் இல்லாமல் இம்முறை அனைத்து அணிகளும் விளையாடுகிறார்கள். கொரோனா வைரஸ் காரணமாக பல வீரர்கள் போட்டியை விட்டு விலகியிருக்கிறார்கள். ஆனால், ஒரு பக்கம் இந்நிலை நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை பலமாக்குகிறது.

சபாஷ் சரியான போட்டி என்று டிவிட்டரில் சென்னை அணியினர் பதிவிட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இது ஆர்வத்தைக் கூட்டுகிறது. 


இன்னும் சில மணி நேரங்களே இந்த போட்டி தொடங்குவதற்கு உள்ள நிலையில், இந்த உத்திகள் எப்படி கைக்கொடுக்கிறது என்று பார்ப்போம்.

Tags:    

Similar News