கிரிக்கெட் வீரர்களால் மீண்டும் வைரலாகும் வாத்தி கம்மிங் பாடல்

Update: 2021-02-21 13:02 GMT

கடந்த மாதம் பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடினர். குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் சிலரும் ஆடினர்.

சையத் முஷ்தாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதன் பின்னர் கோப்பையை வென்ற அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தமிழக வீரர்களுடன் ட்ரஸிங் ரூமில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்பாக்கில் நடைபெற்றது. அப்பொழுது சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டத்தின் நடுவில் மைதானத்தில் வாத்தி கம்மிங் பாடலின் நடனத்தை ஆடினார். இதைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் விசிலடித்து உற்சாகமாயினர். "எனக்கு மாஸ்டர் திரைப்படம் மிகவும் பிடித்தது" . நான் நன்றாக ரசித்து பார்த்தேன் என்று சமிபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.

இந்நிலையல் நேற்று வெளிவந்த இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரின் அணியில் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி இவர் தனது இந்திய அணியில் இடம்பெற்றதை வாத்தி கம்மிங் பாடலுடன் கொண்டாடும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டது

மேலும் படிக்க: ஐபிஎல் ஏலத்தில் ஒரு கோடிக்கு எடுக்கப்பட்ட டெம்போ ஓட்டுநரின் மகன்!