திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020
Home Uncategorized ஐபிஎல் 2020 தொடரில் ரசிகர்களால் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் 2020 தொடரில் ரசிகர்களால் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ்!

2020 ஐபிஎல் தொடரின் போது ரசிகர்கள் அதிகமாக ட்வீட் செய்த அணி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் 2020 தொடர் கடந்த வாரம் யுஏஇயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தொடரின் போது பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெற்றன. அத்துடன் பல போட்டிகள் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் கார சாரமாக விவாதித்தனர்.

இந்நிலையில் 2020 ஐபிஎல் தொடரின் போது ரசிகர்கள் அதிகமாக ட்வீட் செய்த அணி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சென்னையை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

அதேபோல இந்தத் தொடரில் மிகவும் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட போட்டியாக சென்னை vs மும்பை போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டி தான் 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக இருந்தது. இதனையடுத்து மும்பை vs சன்ரைசர்ஸ் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற போட்டி இரண்டாவது இடத்தை பிடித்தது.

மேலும் ரசிகர்களால் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். ஐபிஎல் தொடரின் பொது மிகவும் அதிகமாக ட்ரெண்டான ஹேஸ்டேக் வரிசையில் ‘#IPL2020’, ‘#Whistlepodu’, ‘#CSK’, ‘#yellove’ இருந்தன.

அத்துடன் 2020 ஐபிஎல் தொடரின் பிரபலமான ட்வீட்டாக சச்சின் டெண்டுல்கரின் ட்வீட் அமைந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பூரான் சிக்சரை பாய்ந்து தடுத்தது தொடர்பாக சச்சின் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருந்தார். அதுவே ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்ற ட்வீட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஐபிஎல் 2020 தொடரின் போது ட்ரெண்டான சிஎஸ்கே ட்வீட்ஸ்!

ஐஎஸ்எல் 2020-21: தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எப் சி அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியிருந்தாலும் தமிழகக் கால்பந்து ரசிகர்களைகப் பொறுத்தவரை இன்று தான் முதல் ஆட்டம். காரணம், சென்னையின் எப் சி அணி தனது முதல் ஆட்டத்தை இன்று தான் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான முதல் ஆட்டம் என்பதையும் தாண்டி ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான இந்த ஆட்டத்தின் மேல் வேறு சில...