TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐபிஎல் 2020 தொடரின் போது ட்ரெண்டான சிஎஸ்கே ட்வீட்ஸ்!

ஐபிஎல் 2020 தொடரின் போது ட்ரெண்டான சிஎஸ்கே ட்வீட்ஸ்!
X
By

Ashok M

Published: 12 Nov 2020 3:38 AM GMT

ஐபிஎல் தொடர் கடந்த செவ்வாய்கிழமையுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்தத் தொடரின் போது ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் ஐபிஎல் அணியின் ட்விட்டர் கணக்குகள் அதிகம் ட்வீட் செய்து வந்தனர்.

அந்தவகையில் சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் போட பட்டிருந்த சில ட்வீட்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றன. அவை என்னென்ன?

1. தோனியின் பதில்:

சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியின் போது டாஸ் சமயத்தில் வர்ணனையாளர் தோனியிடம், ‘இதுதான் சிஎஸ்கே அணிக்கு உங்களுடைய கடைசி போட்டியா?’ என்று கேட்டார். அதற்கு தோனி, கண்டிப்பாக இல்லை என்று ஆங்கிலத்தில் ‘definitelynot’ எனக் கூறியிருந்தார். இந்த வாசகம் ட்விட்டரில் அதிகமாக ட்ரெண்டானது. இதனை சிஎஸ்கே ட்விட்டர் பக்கமும் பதிவிட்டிருந்தது.

2. ட்ரோல் ட்வீட்

2020 தொடரில் சிஎஸ்கே அணிக்கு சற்று மோசமானதாக அமைந்தது. இதில் ஒரு போட்டியின் போது சிஎஸ்கே அணி விக்கெட்களை இழந்து கொண்டிருந்த போது சிஎஸ்கே கணக்கில் வடிவேலு வைத்து ஒரு ட்வீட் செய்யப்பட்டது. இதுதான் இந்தத் தொடரில் ரசிகர்களிடமிருந்து அதிக லைக்ஸ் அள்ளிய ட்வீடாக அமைந்தது.

3. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்வீடிற்கு பதில் ட்வீட்:

சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டிக்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போடப்பட்டிருந்தது. அதில், ‘5 நிமிடத்திற்கு ஒரு முறை விசில் போடு’ என்ற வாசகம் மனதில் வருவதாக பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு சிஎஸ்கே அணி ஒரு பதில் பதிவை செய்திருந்தது. அது மிகவும் வைரலானது.

4. விசு-ராமு ஜீன்ஸ் பட ட்வீட்:

அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற சென்னை-பஞ்சாப் போட்டியில் சென்னை அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அப்போது டூபிளசிஸ் மற்றும் வாட்சனின் புகைப்படத்தை போட்டு அவர்களை ஜீன்ஸ் படத்தின் இரட்டை சகோதரர்கள் விசு-ராமு என சிஎஸ்கே ட்வீட் செய்தது. இதுவும் மிகவும் வைரலானது.

5. தோனி தொடர்பான ட்வீட்:

அக்டோபர் 2ஆம் தேதி சென்னை-சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை இரண்டாவதாக பேட்டிங் செய்தது. அந்தப் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக தோனி போராடினார். அப்போது ரன்களை வேகமாக ஓடி சேர்த்தப்பின் சற்று இளைப்பாறிய படத்தை சிஎஸ்கே கணக்கு ட்வீட் செய்திருந்தது. இதற்கு கிட்டதட்ட 14 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ் வந்தது.

இந்த ட்வீட்கள் தவிர மற்ற சில ட்வீட்களும் ரசிகர்களிடையே ட்ரெண்டானது. அவை:

Next Story
Share it