செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home அண்மை செய்திகள் ஐஎஸ்எல் 2020-21: இரண்டாவது வெற்றியை நோக்கி சென்னை அணி

ஐஎஸ்எல் 2020-21: இரண்டாவது வெற்றியை நோக்கி சென்னை அணி

முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப் சி அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்ற சென்னையின் எப் சி அணி தனது அடுத்த ஆட்டத்தில் கேரளா பிலாஸ்டர்ஸ் அணியினை எதிர் கொள்கிறார்கள்.

கோவாவில் நவம்பர் 20 தொடங்கி நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனில் அனைத்து அணிகளும் ஒரு ஆட்டத்தில் விளையாடி முடித்திருக்க இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. தங்களது முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப் சி அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்ற சென்னையின் எப் சி அணி தனது அடுத்த ஆட்டத்தில் கேரளா பிலாஸ்டர்ஸ் அணியினை எதிர் கொள்கிறார்கள்.

முதல் ஆட்டத்தின் வெற்றி தந்த உத்வேகத்தில் களமிறங்கும் சென்னை அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கிறார்கள். மேலும் இந்த இரண்டு அணிகள் மோதும் ஆட்டத்தில் எப்போதும் பரபரப்பு இருக்கும் என்பதால் ரசிகர்களும் இந்த ஆட்டத்தைக் கான ஆர்வமாக இருக்கிறார்கள். இரு அணிகளும் மோதிய கடைசி ஆட்டத்தில் ஆறு கோல்களை அடித்து சென்னையின் எப் சி அணி அசத்தியிருப்பதால் தமிழக ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளார்கள், அதே சமயம் கேரளா ரசிகர்களோ தங்கள் அணி பதிலடி கொடுக்குமா என்பதை காணக் காத்திருக்கிறார்கள்.

இதுவரை அடி இரண்டு ஆட்டங்களும் சமனில் முடிந்ததால் இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். சென்னை அணியோ தங்களது சிறப்பான ஃபார்மினை தக்கவைத்து கொள்ள முற்படுவார்கள். நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கப் போகும் இந்த ஆட்டத்தில் தமிழக ரசிகர்களின் செல்லப் பிள்ளை எட்வின் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் படிக்க: ஆஸ்திரேலியா vs இந்தியா கிரிக்கெட் தொடர்களில் நடைபெற்ற சர்ச்சைகள்!

பேட்ஸ்மென் வாஷிங்டனை அன்றே கணித்த ராகுல் திராவிட்!

வாஷிங்டன் சுந்தர்
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இவர் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்பின்னர் நேற்று இந்திய அணியின் பேட்டிங்கில் 7ஆவது விக்கெட்டிற்கு வாஷிங்டனும் தாகூரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அறிமுக வீரராக தனது முதல் இன்னிங்ஸில்...