TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஆஸ்திரேலியா vs இந்தியா கிரிக்கெட் தொடர்களில் நடைபெற்ற டாப் சர்ச்சைகள் !

ஆஸ்திரேலியா vs இந்தியா கிரிக்கெட் தொடர்களில் நடைபெற்ற டாப் சர்ச்சைகள் !
X
By

Ashok M

Published: 28 Nov 2020 8:53 AM GMT

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு பார்வையாளர்களுடன் நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டி இதுதான்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸின் போது ரசிகர்கள் சிலர் அதானிக்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு கடன் கொடுக்க கூடாது என்று கூறி மைதானத்திற்குள் வந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய-இந்திய தொடர்களில் நடைபெற்ற டாப் சர்ச்சைகள் என்னென்ன?

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கரின் எல்பிடபிள்யூ:

1981ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மெல்பேர்ன் போட்டியில் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கரின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் டென்னிஸ் லில்லி வீசிய பந்தில் கவாஸ்கர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். அப்போது பந்து தனது மட்டையில் பட்ட பிறகு தான் காலில் பட்டதாக கூறி நடுவர் ஒயிட்ஹெட் கொடுத்த தீர்ப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பெவிலியன் திரும்பாமல் இருந்தார்.

பின்னர் டென்னிஸ் லில்லி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவுடன் கவாஸ்கர் கோபம் அடைந்தார். இதனால் அவரும் உடன் பேட்டிங் செய்த சேத்தன் சர்மாவும் பெவிலியன் திரும்பினர். அப்போது இந்திய அணியின் மேலாளர்கள் தலையிட்டு பிரச்னையை சரி செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு 30ஆண்டுகள் கழித்து சுனில் கவாஸ்கர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர்

சச்சினின் எல்பிடபிள்யூ:

1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா-இந்தியா தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சச்சினின் விக்கெட் சர்ச்சைக்குரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அந்தப் போட்டியில் மெக்ராத் வீசிய பந்தை சச்சின் எதிர்கொண்டார். அந்தப் பந்து பவுன்சர் பந்தாக நினைத்து சச்சின் குணிந்தார். அப்போது அப்பந்து குறைவாக பவுன்சாகி சச்சினின் ஹெல்மெட் மீது பட்டது.

அதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் அவுட் தருமாறு முறையிட்டனர். நடுவர் ஹார்பர் அவுட் கொடுத்தார். இந்த எல்பிடபிள்யூ தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹர்பஜன் சிங்

2008 சர்ச்சைக்குரிய சிட்னி டெஸ்ட்:

2008ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இந்தியா டெஸ்ட் போட்டி மிகுந்த சர்ச்சைக்குரிய போட்டியாக மாறியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அண்ட்ரூ சைமண்ட்ஸை குரங்கு எனத் திட்டியதாக சர்ச்சை கிளம்பியது. இந்த விவகாரம் ஐசிசியின் விசாரணை வரை சென்றது. அப்போது இரு அணி வீரர்களும் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை முன்வைத்தனர். இறுதியில் ஹர்பஜன் சிங் குற்றமற்றவர் என்று ஐசிசி தீர்ப்பை வெளியிட்டது.

ரிக்கி பாண்டிங்

மேலும் அந்தப் போட்டியில் நடுவர் ஸ்டீவ் பக்னரின் தீர்ப்பு மிகவும் மோசமானதாக அமைந்தது. இப்போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் சவுரவ் கங்குலியின் கேட்சை கிளார்க் சரியாக பிடித்தாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் நடுவரிடம் அது சரியான் கேட்ச் தான் என்று கூறினார். இதனை ஏற்ற நடுவர் ஸ்டீவ் பக்னர் கங்குலி அவுட் என முடிவை அறிவித்தார். இந்தச் செயல் பெரும் சர்ச்சையானது.

விராட் கோலி

விராட் கோலியின் நடுவிரல் சர்ச்சை:

2012ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆஸ்திரேலிய ரசிகர்களை பார்த்து இந்திய வீரர் விராட் கோலி தனது நடுவிரலை காண்பித்தார் என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு அடுத்த நாள் அனைத்து நாளிதழ்களிலும் விராட் கோலியின் அந்தப் படம் வந்தது. இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக போட்டியின் ரெஃபரியும் விராட் கோலியிடம் விளக்கம் கேட்டதாக கூறப்பட்டது. இளம் விராட் கோலியின் அந்த செயல் பெரும் புகம்பமாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எல்பிஎல் டி20 தொடரில் அணிகளுக்கு சல்மான் கான் குடும்பம், கேரள தொழிலதிபர் உரிமையாளர்கள்!

Next Story
Share it