20 வயதான இந்திய கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று உறுதி 

Update: 2020-08-21 03:00 GMT

இந்திய கால்பந்து வட்டாரத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் 20 வயதான போரிஸ் தங்ஜம் சிங். இவர் மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர் இந்திய அணிக்காக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றார்.

அப்போது முதல் இந்திய கால்பந்தில் வளர்ந்து வரும் இளம் வீரராக இவர் உருவெடுத்தார். அத்துடன் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற யு-20 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியா-அர்ஜென்டினா போட்டியில் இவர் இடம்பெற்று இருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வென்று அசத்தியது.

தற்போது 20 வயதான போரிஸ் தங்ஜம் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்துள்ளார். அதில், “போரிஸ் தங்ஜம் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று வெளிவந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பட்டியலில் போரிஸ் பெயரும் உள்ளது. அவர் தனிமை படுத்தப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

கால்பந்து உலகில் தற்போது விளையாடி கொண்டிருக்கும் வீரர்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள முதல் வீரர் போரிஸ் தங்ஜம் சிங் தான். இவர் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. போரிஸ் தங்ஜம் இந்திய கால்பந்து லீக் போட்டிகளில் ஏடிகே மோகம் பேகான் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பத்து ஆண்டுகளுக்கு மேலாக சாதித்தும் எட்டாத அர்ஜூனா விருது வருத்ததில் ஹாக்கி வீரர்