கிரிக்கெட் டூ திரைப்படங்கள் - யார் இந்த சங்கர் பாசு?
பன்முகங்களைக் கொண்ட சங்கர் பாசுவின் சுவாரசியமான பின்னணி இதோ!
கிரிக்கெட்டிற்கு சங்கர் பாசு புதிது அல்ல. ஆனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவருடைய பின்னணி புதிது.
இப்போது ஆர்சிபி அணி சென்னைக்கு வந்துள்ளது. இவர்களுடைய பயிற்சியில் சங்கர் பாசு முக்கிய பங்கு வகிப்பார். அவர் ராயல் சேலஞ்சர்ஸின் அதிகாரப்பூர்வமான உடல் வலிமையேற்றும் பயிற்சியாளர். மேலும், பிரபல வீரர்களான விராட் கோஹ்லி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருக்கும் பயிற்சி அளித்துள்ளார்.
சங்கர் பாசுவின் பின்னணி
சங்கர் பாசு ப்ரைமல் பேட்டர்ன் என்னும் உடற்பயிற்சி மேம்பாடு நிறுவனம் நடத்தி வருகிறார். பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறது. இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி மேம்பாடு பயிற்சி அளித்துவந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடர்ந்து 5 மாதங்கள் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வெடுத்திருந்த நிலையில், பலரின் உடற்கட்டிற்கு காரணம் சங்கரே. வலிமை மற்றும் கண்டீஷனிங்க் பயிற்சியாளராக, விராட் கோஹ்லியின் தோற்ற மேம்பாட்டிற்கு காரணமாக இருந்தார்.
2015-ல் இவருடைய ராஜினாமாவை பி.சி.சி.ஐ ஏற்றுகொள்ளவில்லை. காரணம், இவருடைய சிறப்பான பயிற்சிகள். கிரிக்கெட் மட்டுமல்லாமல், ஸ்க்வாஷ் போன்ற விளையாட்டுகளின் வீரர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
என்ன தான் விலகி சென்றாலும், சிறப்பான வேலைகளுக்கும், பங்களிப்பிற்கும் என்றுமே மரியாதை உண்டு. அப்படிப்பட்ட மரியாதையை தன்னிடம் வசப்படுத்தியவர் தான், சங்கர் பாசு.
ஒரு பக்கம் விளையாட்டு வீரர்களுக்கு மத்தியில் இருப்பார். மற்றொரு பக்கம் மூணு, எதிர் நீச்சல் போன்ற தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.