கிரிக்கெட் வீரர்களின் உணவு பழக்கங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

இவ்வளவு சூப்பராக விளையாட இவர்கள் எந்த கடையில் அரிசி வாங்குகிறார் என்று நம்மில் எத்தனை பேர் கேட்டிருக்கிறோம். பதில் இதோ!

Update: 2021-04-07 05:36 GMT

விராத்தின் உணவு பழக்கம் (நன்றி - soulfit)

உலக சுகாதார தினத்தன்று நாம் பார்க்கவிருப்பது நம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சிறந்த உணவு பழக்கங்கள். உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் நம் கிரிக்கெட் வீரர்களின் இரண்டு கண்கள். இந்திய அணி வீரர்களின் உடல் மேம்பாட்டு பழக்கங்களே அவர்கள் சிக்ஸர் அடிப்பதற்கும், தொடர் போட்டிகளில் விளையாடுவதற்கும் காரணம்.

ஒரு முறை ஆனந்த் மஹிந்திரா சாம்சனின் உணவைப்பார்த்து ஆச்சரியப்பட்டு கேட்டதாவது -

சரி வாங்க, இவர்களுடைய உணவு பழக்கங்களைப் பார்ப்போம்.

சச்சின் டென்டுல்கர்

விளையாட்டாக இருக்கட்டும், உணவாக இருக்கட்டும் சச்சின் எப்போதும் முதலிடம் தான். என்ன தான் இப்போது விளையாடவில்லை ஆனாலும், இவருடைய உணவுகள் பெரும்பாலும் வேகவைத்த பொருட்களாகவே இருக்கிறது.

காலை சிற்றுண்டியுடன், பாலும் பழசாறும் இருக்கும். அது போன்று, மதியம் தயிரும், சப்பாத்தியும் இல்லாத நாட்களே கிடையாது. இரவுக்கு, சப்பாத்தியும், சாலடும் முக்கியம். புரதச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்வதில்லை.

விராத் கோஹ்லி

விராத்தின் உடற்பயிற்சி வேர லெவல்! கொழு கொழுவென இருந்தவர், 2012-க்கு பிறகு சிக்கென்று மாறிவிட்டார். காரணம், உடற்பயிற்சியும், உணவு பழக்கங்களும் தான். அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டார். சைவ உணவுகளே உட்கொண்டு வருகிறார். முக்கியமாக, நனிசைவத்தைக் கடைப்பிடித்து வருகிறார். இதனால், உடலும் சரி மனதும் சரி பளிச்சென்றே இருக்கிறது.

ரவீந்த்ர ஜடேஜா

வடமாநிலங்களிலிருந்து இவர்கள் வருவதால், கொழுப்பு நிறைந்த மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவுகளையும் முழுமையாக தவிர்த்திட வேண்டும். ஆக, சத்துள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். ஜடேஜா மதிய உணவு உட்கொள்வதில்லை. ஆனால், பழங்கள் சாப்பிடும் பழக்கம் அதிகம்.

நீர் சத்து எவ்வளவு இருக்க வேண்டும்?

நீர் சத்து வீரர்களின் பந்து வீசும் திறனை மாற்றும். நீர் சத்து உணவில் குறைந்தால், ஓடும் வேகமும், கவனமும் குறையும். அதனால் பழங்களும், நீரும் அதிகமாக எடுத்துக்கொள்வது வழக்கம்.

பயிற்சியும் உணவும்

காரி சோபர்ஸ், கிரிக்கெட்டின் கதாநாயகன். காலம் கடந்தாலும், அவருடைய ஆறு அடி உயரமும், பறவையைப் போன்ற வேகமும் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறுத்தியது. இவருடைய உணவு பழக்கம் அதிகமாக தானியத்தையும், பழங்களையும், முஸ்லி போன்றவையையும் கலந்திருக்கும்.

குமார் சங்ககராவும் அதேப்போன்று தான். காயங்கள் ஏற்படாமல், தொடற்பயிற்சியில் இருப்பதற்கு காரணம் அவருடைய "பழ"-க்க வழக்கங்கள் தான்.

எம்.எஸ்.தோனியை எப்படி மறக்கமுடியும்? அதிக சிக்ஸர் அடிப்பதில், தோனி சூப்பர். உடற்பயிற்சிக்கு எந்நேரமும் முக்கியத்துவம் கொடுப்பார். கஞ்சி, பால் மற்றும் பருப்பு வகைகள் காலை உட்கொள்வது வழக்கம். மதியம் சாதமும், பருப்பும் இல்லாத நாட்களே கிடையாது. அதேப்போன்று, காய்கறி சாலட் அனைத்து வீரர்களின் முக்கியமான உணவு.

இவர்கள் அனைவரின் உணவு பழக்கங்களைப் பார்க்கும்போது, இயற்கை உணவுகளின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ளலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவோம், சிங்கம் போல ஃபிட்-டாக இருப்போம்.

உணவே மருந்து! 

Tags:    

Similar News