திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home அண்மை செய்திகள் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதி

பேட்மிண்டனின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பேட்மிண்டனின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்றார். தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இதன் முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் களமிறங்கவில்லை. இவர் போட்டியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடருக்கு முன்பாக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மூன்று முறை கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று மூன்றாவது முறையாக சாய்னா நேவாலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த மூன்றாவது பரிசோதனையில் சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் சக பேட்மிண்டன் வீரர் குருசாய்தத் திருமணத்தில் இவரும் கணவர் கஷ்யபும் பங்கேற்றனர்.

இந்த திருமணத்திற்கு பிறகு சாய்னாவின் கணவர் கஷ்யபிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அப்போது சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனினும் இவர் தாய்லாந்திற்கு வந்த பிறகு கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும் சாய்னா நேவாலுடன் சேர்ந்து இந்திய பேட்மிண்டன் வீரர் பிரனாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் இருவருடன் நேரடி தொடர்பில் இருந்த சாய்னாவின் கணவர் கஷ்யபும் மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சிட்னி டெஸ்டின் போது சிராஜை குரங்கு,நாய் என்று ரசிகர்கள் திட்டியதாக இந்திய அணி புகார்!

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...