TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

சிட்னி டெஸ்டின் போது சிராஜை குரங்கு,நாய் என்று ரசிகர்கள் திட்டியதாக இந்திய அணி புகார்!

சிட்னி டெஸ்டின் போது சிராஜை குரங்கு,நாய் என்று ரசிகர்கள் திட்டியதாக இந்திய அணி புகார்!
X
By

Ashok M

Published: 10 Jan 2021 12:39 PM GMT

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்கவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. மூன்றாவது ஆட்டத்தின் முடிவில் இந்திய வீரர்கள் சிலர் மீது ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியதாக நடுவர்களிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நான்காவது நாளான இன்றும் ஆட்டத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் பவுண்டரி கொட்டிற்கு அருகே நின்று ஃபில்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவர் நடுவரிடம் வந்து முறையிட்டார். இதனைத் தொடர்ந்து சில நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்திலிருந்து ஒரு சில ரசிகர்கள் வெளியேற்ற பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பத்திரிகைக்கு தகவல் அளித்துள்ளார். அதில்,”இன்றைய போட்டியின் போது சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிராஜை பெரிய குரங்கு, பழுப்பு நிற நாய் என்ற இனவெறி கருத்துகளை தெரிவித்தனர். இதனால் அவர் நடுவரிடம் முறையிட்டார். ஏனென்றால் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி புகார் அளித்த போது நடுவர்கள் இந்தச் சம்பவம் மீண்டும் நடந்தால் உடனே அவர்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக இன்றைய போட்டியின் போது இந்த விஷயம் நடுவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது” எனத் தெரிவித்தார். ஏற்கெனவே நேற்றைய புகாரை போட்டியின் ரெஃபரி விசாரித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், இந்திய வீரர்கள் சிலர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு வருத்தும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க: ‘ஓடினா போதும்’ என்று ஒலிம்பிக் தகுதியை நோக்கி பயணிக்கும் ஹிமா தாஸ்

Next Story
Share it