TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

‘என் அம்மா செய்த தியாகங்கள் அனைத்தும் இப்போது கண் முன் வருகிறது’- மாரியப்பன் 

‘என் அம்மா செய்த தியாகங்கள் அனைத்தும் இப்போது கண் முன் வருகிறது’- மாரியப்பன் 
X
By

Ashok M

Published: 22 Aug 2020 3:25 AM GMT

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாரியப்பன் தங்கவேலு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், “இந்த விருதை என்னுடைய விளையாட்டு பயனத்தில் ஒரு பெரிய சாதனையாக கருதுகிறேன். ஏனென்றால், ரோகித் சர்மா, வினேஷ் போகட், ராணி ராம்பால், மணிகா பத்ரா ஆகியோருடன் இணைந்து இந்த விருதை பெறுவதே எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி.

இந்த விருது 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல எனக்கு ஒரு நல்ல ஊக்கத்தை தரும். இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட போது சற்று பதட்டதுடன் இருந்தேன். தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் மகிழ்ச்சியக உள்ளது. இந்த நேரத்தில் நான் ஒரு தடகள வீரராக வேண்டும் என்பதற்காக என் அம்மா செய்த தியாகங்களும் ஊக்கமும் தான் என் கண் முன் வருகின்றன.

மேலும் இவ்வளவு நாட்கள் நான் பயிற்சி செய்யாமல் இருந்தது இல்லை. எனினும் அனைத்து விளையாட்டு வீரரும் இந்தப் பிரச்னையை தான் தற்போது சந்தித்து வருகின்றனர். இந்த நிலை விரைவில் மாறி நான் மீண்டும் பயிற்சிக்கு திரும்ப வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கேல் ரத்னா விருது வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,”நமது மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

1991-92ஆம் ஆண்டு முதல் முறையாக கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது. முதல் கேல் ரத்னா விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வென்று அசத்தினார். அவருக்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து தற்போது மாரியப்பன் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “கைப்பந்து விளையாட்டில் தமிழ்நாடு அசைக்க முடியாத சக்தி”- தஞ்சாவூரை சேர்ந்த பயிற்சியாளர்

Next Story
Share it