TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐபிஎல் 2020 தொடரில் கலக்கும் டாப் 5 இந்திய பேட்ஸ்மென்கள் யார் யார்?

ஐபிஎல் 2020 தொடரில் கலக்கும் டாப் 5 இந்திய பேட்ஸ்மென்கள் யார் யார்?
X
By

Ashok M

Published: 29 Oct 2020 4:17 AM GMT

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எந்தந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற விறுவிறுப்பு எழ தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடப்புத் தொடரில் கலக்கி வரும் டாப் 5 இந்திய பேட்ஸ்மென்கள் யார் யார்?

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் குறைந்த நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்தனர். இதன்காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் வீரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது. எனினும் இதனை பொருட்படுத்தாமல் இந்திய வீரர்கள் சிலர் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர்.

5. மாயங்க் அகர்வால் (398 ரன்கள்):

பஞ்சாப் அணியின் முக்கிய பேட்ஸ்மென் மாயங்க் அகர்வால். நடப்பு ஐபிஎல் தொடரில் சதம் அடித்த மூன்று வீரர்களில் இவரும் ஒருவர். இவர் இதுவரை 10 போட்டிகளில் களமிறங்கி 398 ரன்கள் விளாசியுள்ளார். அத்துடன் மாயங்க் நடப்புத் தொடரில் 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் கடந்து அசத்தியுள்ளார்.

4. தேவ்தத் படிக்கல்(417 ரன்கள்):

நிழற்படம்: ஐபிஎல்

பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இளம் வீரர் தேவ்தத் படிக்கல் உருவெடுத்துள்ளார். கோலி,டிவில்லியர்ஸ் ஆகிய சிறப்பான வீரர்கள் இருக்கும் அணியில் இடம்பெற்றுள்ள படிக்கல், தனது பேட்டிங் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளார். இவர் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 417 ரன்கள் விளாசியுள்ளார்.

3. விராட் கோலி (424 ரன்கள்):

கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகன் விராட் கோலி. எந்தவித கிரிக்கெட் ஆட்டமாக இருந்தாலும் கோலியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சற்று ஃபார்ம் இல்லாமல் தவித்த கோலி, பின்னர் ஃபார்மிற்கு திரும்பி அசத்தி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 424 ரன்களை கோலி அடித்துள்ளார்.

2. ஷிகர் தவான்(471 ரன்கள்):

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே வீரர் ஷிகர் தவான் தான். இவர் டெல்லி அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருந்து வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் 2 சதம் மற்றும் 2 அரைசதம் கடந்து 471 ரன்கள் விளாசி தவான் அசத்தி வருகிறார். மேலும் தொடர்ச்சியாக இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் தவான் படைத்துள்ளார்.

1. கே.எல்.ராகுல்(595 ரன்கள்):

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் கே.எல்.ராகுல் தான். இவர் ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் இத்தொடரில் அதிக அரைசதம் கடந்த வீரரும் கே.எல்.ராகுல் தான். தற்போது வரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 1 சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 595 ரன்களை ராகுல் விளாசியுள்ளார். அத்துடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோராக 132* ரன்கள் அடித்து ராகுல் அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க: ‘ஜீவா திரைப்படம், ஐபிஎல் டூ இந்திய கிரிக்கெட் அணி’- வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம்

Next Story
Share it