திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020
Home அண்மை செய்திகள் ஐபிஎல் 2020 தொடர் மூலம் 2500 கோடி ரூபாய் விளம்பர வருமானம் ஈட்டிய ஸ்டார் நிறுவனம்!

ஐபிஎல் 2020 தொடர் மூலம் 2500 கோடி ரூபாய் விளம்பர வருமானம் ஈட்டிய ஸ்டார் நிறுவனம்!

2020ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் பெரும் வெற்றியை பெற்றது. மேலும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டியது ஆகியவற்றிலும் இத்தொடர் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

உலகளவில் மிகப்பெரிய டி20 தொடர்களில் ஒன்று ஐபிஎல். இம்முறை கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் தடை செய்யப் பட்டிருந்தன. இதனால் ஐபிஎல் தொடர் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2020ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் பெரும் வெற்றியை பெற்றது.

மேலும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் ஈட்டியது ஆகியவற்றிலும் இத்தொடர் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதுதொடர்பாக ‘இன்சைட்ஸ்போர்ட்ஸ்’ தளம் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 ஐபிஎல் தொடரின் போது விளம்பரங்களின் மூலம் 2500 கோடி ரூபாயை ஸ்டார் நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செனலின் மூலம் 2250 கோடி ரூபாயும், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மூலம் 250 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இந்த வருவாய் 2200 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது 250 கோடி ரூபாய் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இது 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரைவிட 28 சதவிகிதம் அதிகமாக அமைந்துள்ளது. 2020 ஐபிஎல் தொடரின் முதல் 41 போட்டிகளை கிட்டதட்ட 7 பில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 44 போட்டிகளை 5.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். அத்துடன் சராசரியாக 2020 தொடரில் ஒவ்வொரு போட்டியையும் 108 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதுவும் 2019ஆம் ஆண்டு தொடரைவிட அதிகமாகும். 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியையும் சராசரியாக 98 மில்லியன் பேர் பார்த்து ரசித்து குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஐபிஎல் 2020 தொடரின் டாப்-5 கேட்ச் என்னென்ன?

ஆஸ்கார் விருதுக்கு ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் பரிந்துரை!

உலக திரைப்பட விருதுகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒன்று ஆஸ்கார். இந்த விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021ஆம் ஆண்டிற்கான விருதுகள் அடுத்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான பரிந்துரை பட்டியல்கள் தற்போது தயாராகி வருகின்றன. அந்தவகையில் சிறந்த வெளிநாட்டு மொழி படம் என்ற பிரிவிற்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் லிஜோ...