திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020
Home அண்மை செய்திகள் ஐபிஎல் 2020 தொடரின் டாப்-5 கேட்ச் என்னென்ன?

ஐபிஎல் 2020 தொடரின் டாப்-5 கேட்ச் என்னென்ன?

ஐபிஎல் 2020 தொடர் கடந்த வாரம் யுஏஇயில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்தத் தொடரில் சிறப்பாக அமைந்த 5 கேட்ச்கள் என்னென்ன?

ஐபிஎல் 2020 தொடர் கடந்த வாரம் யுஏஇயில் நடைபெற்று முடிந்தது. இந்தத் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. கொரோனா காலத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் நடைபெற்ற இத்தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தத் தொடரில் சிறப்பாக அமைந்த 5 கேட்ச்கள் என்னென்ன?

5. தோனியின் பறக்கும் கேட்ச்:
லீக் சுற்றின் 21ஆவது போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் சிவம் மாவியின் விக்கெட்டை பிராவோ எடுத்தார். அப்போது மாவி கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் தோனி டைவ் செய்து பிடித்தார். இந்தக் கேட்ச் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

4. அன்குல் ராய் கேட்ச்:
லீக் சுற்றின் 20 ஆவது போட்டியில் மும்பை-ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் லம்ரோரின் விக்கெட்டை ராகுல் சாஹர் எடுத்தார். லம்ரோர் தூக்கி அடித்த பந்தை அன்குல் ராய் பின்னால் ஓடி சென்று லாவகமாக பிடித்தார். இது சிறப்பான கேட்சாக அமைந்தது.

3. சுஜித் கேட்ச்:
லீக் சுற்றின் 43ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ்-கிங்ஸ்லெவன் அணிகள் மோதின. இதில் மணீஷ் பாண்டேவின் தூக்கி அடித்த பந்தை பவுண்டரி எல்லைக் கோட்டிற்கு அருகே சுஜித் ஓடி வந்து பிடித்து அசத்தினார். அத்துடன் எல்லைக் கோட்டை தாண்டாமலும் சிறப்பாக கேட்சை பிடித்தார். இது கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்களை உற்சாகப்படுத்தியது.

2. தேவ்தத் படிக்கலின் கேட்ச்:
ஐபிஎல் தொடரின் 43ஆவது போட்டியில் பெங்களூரு-மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை வீரர் சவுரவ் திவாரி அடித்த பந்தை படிக்கல் முன்னால் பாய்ந்து சிறப்பாக கேட்ச் பிடித்தார். இது சிறப்பான கேட்சாக அமைந்தது. இளம் வீரர் படிக்கல் பேட்டிங்கில் மட்டுமில்லாது ஃபில்டிங்கிலும் கலக்கி அசத்தினார்.

1. ஆர்ச்சரின் கேட்ச்:
இத்தொடரின் 45ஆவது லீக் போட்டியில் மும்பை-ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் மும்பை வீரர் இஷான் கிஷன் அடித்த பந்தை ஜோஃப்ரா ஆர்ச்சர் குதித்து ஒரு கையில் லாவகமாக பிடித்தார். இந்தக் கேட்ச் ராஜஸ்தான் அணி வீரர்கள் உட்பட பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ட்விட்டரிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘ஆர்ச்சர் டூ ஜடேஜா’- 2020 ஐபிஎல் தொடரின் டாப் 5 கேமியோ இன்னிங்ஸ்!

ஆஸ்திரேலியா vs இந்தியா கிரிக்கெட் தொடர்களில் நடைபெற்ற டாப் சர்ச்சைகள் !

ஆஸ்திரேலியா vs இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு பார்வையாளர்களுடன் நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டி இதுதான். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸின் போது ரசிகர்கள் சிலர் அதானிக்கு நிலக்கரி...