TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

‘ஆர்ச்சர் டூ ஜடேஜா’- 2020 ஐபிஎல் தொடரின் டாப் 5 கேமியோ இன்னிங்ஸ்!

‘ஆர்ச்சர் டூ ஜடேஜா’- 2020 ஐபிஎல் தொடரின் டாப் 5 கேமியோ இன்னிங்ஸ்!
X
By

Ashok M

Published: 13 Nov 2020 3:04 AM GMT

2020ஐபிஎல் தொடர் யுஏஇயில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்தத் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று அசத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற்றன. அந்தவகையில் இத்தொடரின் சிறப்பான டாப்-5 கேமியோ இன்னிங்ஸ் என்னென்ன?

5. ஜடேஜா 31*(11) vs கொல்கத்தா

கொல்கத்தா - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 172 ரன்கள் இலக்கை சேஸ் செய்தது. அப்போது ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் சென்னை அணிக்கு 16 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டன. இந்த இக்கட்டான சூழலில் ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் அடித்து சென்னையை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். குறிப்பாக கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளில் சிக்சர்கள் விளாசி அசத்தினார்.

4. பொல்லார்டு 34*(12) vs பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை அணி முதலில் களமிறங்கியது. அந்தப் போட்டியில் மும்பை அணி 16 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இதனால் இறுதி கட்டத்தில் அதிரடி தேவைப்பட்டது. இதனை பொல்லார்டு-நைல் ஜோடி அதிரடி காட்டியது. அதிரடியாக விளையாடிய பொல்லார்டு 12 பந்துகளில் 34 ரன்கள் விளாசி மும்பை அணியின் ஸ்கோரை 176ஆக உயர்த்தினார்.

3. கிறிஸ் மோரிஸ் 25*(8) vs பஞ்சாப்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 18ஆவது ஓவரில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் அவுட் ஆகினர். இதனால் பெங்களூரு அணியின் ஸ்கோர் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு கிறிஸ் மோரிஸின் அதிரடி கைகொடுத்தது. இவர் 8 பந்துகளில் 25 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை 150க்கும் மேல் உயர்த்தினார்.

2. பூரான் 25*(8) vs ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டியில் மாயங்க் அகர்வால் சதம் விளசியிருந்தார். எனினும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் இவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத் தொடர்ந்து இறுதி கட்டத்தில் வந்த பூரான் அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோரை 220 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். இவர் 8 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார்.

1.ஆர்ச்சர் 27*(8) vs சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை-ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்-சஞ்சு சாம்சான் அதிரடி காட்டினர். இதனால் ராஜஸ்தான் அணி 200 ரன்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 19ஆவது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆகினார். இதனைத் தொடர்ந்து வந்த ஆர்ச்சர் 4 சிக்சர்கள் விளாசி 8 பந்தில் 27 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எட்டியது.

இந்த ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் அதிரடி காட்டினாலும், இந்த ஆட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஐபிஎல் 2020 தொடரில் ஆட்டங்களை மாற்றிய டாப்-5 வீரர்கள்!

Next Story
Share it